Magic of Trisha-Simbu-GVM.. ஷாருக்கான் படத்தை ஓரம்கட்டிய விண்ணைத் தாண்டி வருவாயா!!

Feb 26, 2024,05:45 PM IST
சென்னை: ரீ ரிலீஸ் படங்களில் ஷாருக்கானின் "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே"வை பின்னுக்கு தள்ளியுள்ளது சிம்பு - திரிஷா நடிப்பில் அசத்திய, விண்ணைத் தாண்டி வருவாயா.

காதல் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடம் உண்டு. வசந்த மாளிகை முதல் இன்று வரை உள்ள காதல் படங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி தான் ரீ ரிலீஸ் படங்களும் வெற்றி பெறுகின்றன. ஷாருக்கானின் "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே"என்ற படம் ரீ ரிலீஸ்சின் போது அதிக நாட்கள் ஓடி வெற்றி மகுடத்தை சூட்டியது எனலாம். ஆனால் இப்போது ரீ ரிலீசில் இந்த படத்திற்கு டப் கொடுத்து வெற்றி பெற்றுள்ளது விண்ணைத் தாண்டி வருவாயா. 





கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், சிலம்பரசன் மற்றும் திரிஷா நடித்த இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 வருடங்கள் கடந்த நிலையில் இதனை ரசிகர்கள் இணையத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இப்படம் 2010ம் ஆண்டு வெளிவந்த போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் சுமார் 50 கோடி ரூபாய் வரை உலகம் முழுவதும் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்தப் படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதற்கும் பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது.  இந்த அளவிற்கு வரவேற்பை பெற்றதற்கு படத்தின் கதை, அற்புதமான க்ளைமேக்ஸ், பாடல்கள், சிம்பு-த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி என பலவற்றை கூறி வருகின்றனர்.

அன்றைய இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் அதே படங்கள் இன்றைய இளசுகள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு உதாரணமாக விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை சொல்லலாம்.  படம் ஹிட் அடித்ததா அல்லது பாடல்கள் ஹிட் அடித்தனவா என்றும் கேட்கும் அளவிற்கு பாடல்களையும் ரசிகர்கள் முனுமுனுத்து வருகின்றனர். விண்ணைத் தாண்டி வருவாயா பட வெற்றிக்கு இதுவும் காரணமாக சொல்லப்படுகிறது.




திரை அரங்குகளில் மறு வெளியீட்டில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களில் முதலாக ஷாருக்கானின் "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே". அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிக நாள் ஓடிய காதல் திரைப்படம் எனும் பெருமையை சிலம்பரசன்நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா சாதனை படைத்துள்ளது. 

சென்னையில் உள்ள மல்டிபிளஸ் திரையரங்கு ஒன்றில்  750 நாட்களுக்கு மேலாக இத்திரைப்படம் ஓடி கொண்டு இருக்கிறது.. இன்றளவும் இத்திரைப்படம் இளைஞர்கள், காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்