மும்பை: இந்திய தேர்தல் ஆணையம் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரபவார் கட்சிக்கு, கொம்பு இசைக் கருவியை ஊதும் மனிதன் சின்னத்தை தேரத்ல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் செல்வாக்கு மிகுந்த கட்சியாக திகழ்வது தேசியவாத காங்கிரஸ் கட்சி. இந்தக் கட்சியை கடந்த ஆண்டு ஜூலை 2 ந் தேதி அஜித் பவார் தனது ஆதரவு 8 எம்எல்ஏக்களுடன் உடைத்தார். பின்னர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பாஜக கூட்டணயில் இணைந்தார். அஜித் பவார் துணை முதல்வராகவும், அவரது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது.
அதன் பின்னர் தனது தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்தான் உண்மையான கட்சி, என்று கூறி சின்னம் மற்றும் கட்சி பெயருக்கு உரிமை கோரினார். இதையடுத்து அஜீத் பவாருக்கு எதிராக சரத்பவாரும் களம் குதித்தார். இந்த சண்டை காரணமாக, தேர்தல் ஆணையம் தலையிட்டது. அஜீத் பவார் தலைமையிலானதுதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று கூறி கட்சிப் பெயரையும், தேரத்ல் சின்னத்தையும், அஜீத் பவாருக்கே ஒதுக்கி உத்தரவிட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சரத் பவாருக்கு அவரது கட்சியின் பெயரை தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் என்ற பெயரைப் பயன்படுத்த அனுமதி அளித்தது தேர்தல் ஆணையம். தற்போது அவருக்கு கொம்பூதும் மனிதன் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. வருகிற 27ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 மாநிலங்களவை தொகுதிக்கான தேர்தல் நடக்க உள்ளது. இதில் சரத்பவார் கட்சியும் போட்டியிட தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது கட்சி மறுபடியும் உடையுமா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பும் இப்போதே கிளம்பி விட்டது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}