"பிரதமர் மோடியின் டிகிரி".. இதெல்லாம் ஒரு பிரச்சினையா.. சேம் சைட் கோலடிக்கும் பவார்!

Apr 10, 2023,10:44 AM IST
மும்பை: நாட்டில் பேச வேண்டிய பிரச்சினைகள் நிறைய உள்ளன.அதை விட்டு விட்டு பிரதமர் மோடியின் பட்டப் படிப்பு உள்ளிட்ட தேவையில்லாத பிரச்சினைகள் குறித்து சில தலைவர்கள் பேசுவது வேதனையாக உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

சமீப காலமாக பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் சரத் பவார் உள்ளார். கெளதம் அதானியை முழுமையாக ஆதரித்துப் பேசுகிறார். தொழிலதிபர்களை விமர்சிக்கக் கூடாது என்று சொல்கிறார். ராகுல்காந்தி பேச்சு தவறு என்று கூறுகிறார். தொடர்ந்து பவார் பாஜக தரப்புக்கு ஆதரவாக பேசி வருவது  எதிர்க்கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்த நிலையில்  பிரதமர் நரேந்திர மோடியின் டிகிரி குறித்த சர்ச்சை சில காலமாக இருந்து வருகிறது. குறிப்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியின் பட்டப் படிப்புகுறித்து தொடர்ந்து பேசி வருகிறார். மேலும் சில தலைவர்களும் இதுகுறித்துதொடர்ந்து பேசி வருகின்றனர்.இதுகுறித்து பவார் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து சரத் பவார் கூறுகையில், தலைவர்களின் கல்வித் தகுதி குறித்து பேசி வரும் தலைவர்கள் உண்மையான பிரச்சினைகள் குறித்துப் பேசாமல் நேரத்தை வீணடிக்கின்றனர். இதை விட மிகப் பெரிய பிரச்சினைகளை நாடு சந்தித்து வருகிறது. அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு, பணவீக்கம் ஆகியவை குறித்து தலைவர்கள் கவலைப்பட வேண்டும். ஆனால் சின்ன சின்ன பிரச்சினைகளையும், பிரச்சினையே இல்லாதவற்றையும் பற்றித்தான் இவர்கள் அதிகம் கவலைப்படுகிறார்கள், நேரத்தை வீணடிக்கிறார்கள்.

கல்லூரி டிகிரி பற்றிக் கவலைப்படுகிறார்கள். உங்க டிகிரி என்ன.. என்னோட டிகிரி என்ன.. இதெல்லாம் அரசியல் பிரச்சினைகளா.. எத்தனை பிரச்சினைகள் உள்ளன. அதைப் பற்றிப் பேசுங்களேன். மதம், ஜாதி அடிப்படையில் மக்களைப் பிரிக்கிறார்கள். மகாராஷ்டிராவில் பருவம் தவறிய மழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதெல்லாம்தான் பிரச்சினைகள். இதைப் பற்றித்தான் நாம் பேச வேண்டும் என்றார் சரத் பவார்.

பவார் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ள பிரச்சினைகளுக்கு எதிராக பேசி வருவது சலசலப்பையும்,  பவார் மனதில் வேறு ஏதேனும் திட்டம் உள்ளதா என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்