- ஷீலா ராஜன்
இந்த பணத்தை ரமேஷுக்கு கொஞ்சம் அனுப்புறியா அருணா?? என்றாள் சுதா ...எதுக்கு இவருக்கு பணம் அனுப்புற சுதா ? என்று கேட்ட அருணாவிற்கு என்ன சொல்வதென்று தெரியாது ஒரு கணம் விழித்த சுதா சமாளித்துக் கொண்டு இவரா ! இவர் என்கூட படித்தவர், ஏதோ அவசரத்துக்கு பணம் வேணும்னு கேட்டாரு.. உன்னோட அக்கவுண்ட்ல இருந்து அனுப்புறியா நான் உனக்கு கொடுத்துடறேன் என்றாள் ?
ஓ !அப்படியா சரி சரி இதோ அனுப்புறேன் என்று பணத்தை ரமேஷுக்கு அனுப்பினாள் அருணா ..
இருவரும் நல்ல தோழிகள், ஒரே தெருவில் வசிப்பவர்கள், சுதாவை விட அருணா மூத்தவர். ஏன் முதிர்கண்ணி என்று கூட சொல்லலாம். ஏனோ அவளுடைய திருமணம் தடைபட்டுக் கொண்டே வந்தது .. சுதாவின் பெற்றோர் கூட அருணாவிற்காக மாப்பிள்ளை பார்த்து வந்தனர்..
நாட்கள் கடந்தன, வாரங்கள் ஓடின. சுதா புதிய வேலையில் சேர வேறு ஊருக்கு போய்விட்டாள். இடையே இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டது .. பஸ்ஸிலிருந்து இறங்கிய சுதாவை பார்த்து ஓடி வந்து கையைப் பிடித்துக் கொண்டாள் அருணா .

அருணாவிடம் புதிய மாற்றம் தெரிந்தது மகிழ்ச்சியாக இருந்தார். முகம் பொலிவாக தோன்றியது சுதாவிற்கு ..என்ன விசேஷம் ? அருணா ,என்கிட்ட சொல்ல மாட்டியா !என்றாள்..
உன் கிட்ட சொல்லாம, யார் கிட்ட சொல்லப் போறேன் நான் ஒருத்தர லவ் பண்றேன் என்ற அருணாவை சுதா ஆச்சரியமாக பார்த்தாள் ..
நெஜமாவா சொல்றீங்க !!
ஆமாப்பா எங்க வீட்ல கூட இன்னும் சொல்லல, உன் கிட்ட தான் முதல்ல சொல்றேன்… என்றபடியே நாணத்துடன் புன்னகைத்தாள்..
யார் அந்த பாக்கியசாலி ?? என்று கேட்ட சுதாவிற்கு அருணாவின் பதில் மண்டையில் இடியை இறக்கியது. ஆனாலும் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் என்றபடியே விடை பெற்றார் சுதா .
இரண்டு ஆண்டுகள் கழித்து வீட்டுக்கு வந்த சுதாவின் முகத்தில் மகிழ்ச்சியை காணாத அவரது அண்ணன் என்ன சுதா ?என்ன ஆச்சு ?ஏன் ஒரு மாதிரியா இருக்கு என்று கேட்டார் ….
ஒன்னும் இல்ல நான் பஸ்ல வந்த டையர்டு அவ்வளவுதான் என்றபடி படுக்க அறையில் புகுந்து கொண்டாள் …
தன் கைபேசியை எடுத்து தன் தோழிக்கு போன் செய்து இரவு முழுவதும் புலம்பிக்கொண்டே இருந்தாள்..
காலையில் சீக்கிரமாகவே கிளம்பி அருணாவின் வீட்டிற்கு சென்று அருணா உடன் பேச ஆரம்பித்தாள். அருணா தன் காதல் தன் காதலனைப்பற்றி வாய் வலிக்க வலிக்க சுதாவிடம் பேசிக் கொண்டே இருந்தாள்…
நான் இல்லாம ஒரு வாழ்க்கையை அவரால் நெனச்சு கூட பாக்க முடியல அப்படின்னு சொல்லுவாரு. ஒரு நாளைக்கு ஒரு பத்து முறையாவது ஃபோன் பண்ணிடுவாரு. என் மேல அப்படி ஒரு அக்கறை. நிறைய வெளியில போயி இருக்கோம். என்னை ஒரு குழந்தையை போல பாத்துக்குவாரு…. நீங்க இந்த ஊர்ல இல்லாதனால என்னால இதெல்லாம் உங்ககிட்ட சொல்ல முடியல என்று கன்னம் சிவந்தாள்..
நீங்க இப்படி சந்தோஷமா இருக்குறது பாக்குறதுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டாள் சுதா…
மறுநாள் அவரின் தோழி வீட்டிற்கு வந்தார் ..இருவரும் வெளியே போவதாக சொல்லிவிட்டு கிளம்பி ஒரு பார்க்கில் வந்து அமர்ந்தனர்… என்னடி ஆச்சு ஏன் இப்படி பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்க என்னடி ஆச்சு ? என்ற தோழியின் மடியில் படுத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள் சுதா ..
இருவரும் ஒரு முடிவு எடுத்தனர் ..அதற்குப் பின் நடந்தவை எல்லாம் யார் வாழ்க்கையிலும் நடக்கக்கூடாதவை..
ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சுதாவும் அருணாவும் சந்தித்துக் கொண்டனர் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொள்ளவே இல்லை ..
அமைதியாக அமர்ந்திருந்த இருவர் கண்களிலும் கண்ணீர் வழிந்த ஓடியது.. இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டனர் ..
நடந்தது எல்லாம் ஒரு திரில்லர் படம் போல இருந்தது ...
தழுதழுத்த குரலில் எப்படி கண்டுபிடித்த சுதா என்றஅருணாவை பார்த்து என் தோழி எனக்கு உதவி பண்ணாங்க..
நாங்க ரெண்டு பேரும் கிளம்பி நேரா அவங்க வீட்டுக்கே போயிட்டோம்.. போன அப்புறம் தான் தெரிஞ்சது அவர் ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனார் வாழ்ந்துட்டு இருக்காருன்னு.. அவரோட அட்ரஸ கண்டுபிடிக்கிறது கூட ரொம்ப கஷ்டமா இருந்துச்சு … என்னோட பிரெண்ட்ஸ் தான் அவரோட அக்கவுண்ட் நம்பரை வைத்து அவருடைய அட்ரஸை கண்டுபிடித்து கொடுத்தாங்க
எத்தனை முறை கேட்டாலும் அவர் அட்ரஸ சொன்னதே இல்ல .அப்பப்போ போன் நம்பரை மாத்திக்கிட்டே இருப்பாரு என்று சுதாவை பார்த்து அருணா. ஆமா !ஆமா! என்கிட்ட கூட அவர் வீட்டு அட்ரஸ் சொன்னதே இல்ல ..
நான் தான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன் சுதா என்று அருணாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு சுதா அழ ஆரம்பித்தாள்..
உங்க மேல தப்பு இல்லைங்க. நான் உங்ககிட்ட முன்னாடியே உண்மையை சொல்லி இருக்கணும் .. சொல்லாதது தான் இங்கு பெரிய மிஸ்டேக்கா போயிடுச்சு அருணா..
நானும் தான் சொல்லி இருக்கணும். சொல்லாதது என்னுடைய தப்பும் தான் என்ற அருணா,,ஆனா நம்ம ரெண்டு பேர் கிட்டயுமே ரமேஷ் தினமும் பேசியிருக்கிறார் ..ரெண்டு பேரும் அவரை மீட் பண்ணி இருக்கோம் …ஒரு துளி கூட சந்தேகம் வராமல் நடந்து இருக்காரு…
நீங்க அவரை காதலிக்கிறதா சொன்ன உடனே என்னால அதை நம்பவே முடியல ஆனா அடுத்த நாள் உங்க வீட்டுக்கு வந்தப்போ நீங்க சொன்ன விஷயங்களை கேட்ட பிறகு தான் ரமேஷ் இப்படிப்பட்டவர் என்று எனக்கு தெரிய வந்தது … என்ற சுதா கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்..
சுதா நீங்க பணம் அனுப்புன சொன்ன உடனே நான் அனுப்பினேனா ,,அதுக்கப்புறம் பணம் வந்து சேர்ந்ததுான்னு அவருக்கு நான் ஒரு மெசேஜ் போட்டேன் .. அவர் அதுல இருந்து என்கூட பேச ஆரம்பிச்சாரு. அவர் பேசிய விதம் காட்டிய அக்கறை எல்லாம் அவர் மேல எனக்கு காதல வர வச்சது …எத்தனையோ மாப்பிள்ளைகள் வந்து என்ன பார்த்துட்டு போன பிறகும் எனக்கு திருமணம் என்ற ஒன்னு வாய்க்கவே இல்லை.. அந்த சமயத்துல தான் ரமேஷ் வந்தார் ..என்னுடைய பலவீனத்தை தெரிஞ்சுக்கிட்டு என்கிட்ட ரொம்ப நல்லா பழகுற மாதிரி நடிச்சிருக்காரு ..ஆனா அது உங்களுக்கு தெரியவே இல்ல பாத்திங்களா என்று அருணாவை கண் கலங்க பார்த்த சுதா நானும் தாங்க ஏமாந்துட்டேன்..
கிட்டத்தட்ட ஆறு வருஷங்கள் நாங்க பழகி இருக்கோம் .. திருமணம் பண்ணிக்கலாமா என்று கேட்கும் போதெல்லாம் ஏதோ காரணங்களை சொல்லி சொல்லி தட்டி கழித்தார் ரமேஷ்.. அப்பப்போ பணம் கேட்பாரு நானும் கொடுப்பேன்.. அப்படி ஒரு சமயம் தான் உங்கள பணத்தை அனுப்ப சொன்னேன் ..அதுல இருந்து உங்க கூட தொடர்புல இருந்திருக்கார் என்று எனக்கு தெரியவே தெரியாது என்று ஆரம்பித்த சுதா, அருணா நீங்கதாங்க என்னை காப்பாத்தி இருக்கீங்க இல்லனா என் வாழ்க்கையும் கெட்டுப் போயிருக்கும். நீங்க அவரை காதலிக்கிறதா சொல்லலனா எனக்கு அவர பத்தி தெரிஞ்சு இருக்காது என்ற சுதாவை நன்றியோடு பார்த்தாள் அருணா .
எங்க அம்மா நான் சின்ன வயசா இருக்கும் போதே இறந்துட்டாங்க. என்கிட்ட அன்பாகவோ ஆறுதலாவோ பேச வீட்ல ஆள் இல்ல அப்பா வியாபாரத்தை கவனிக்கப்படுவாரு அண்ணா வேலைக்கு போயிடுவாரு ஒரு யோகா கிளாஸ்ல தான் இந்த ரமேஷை மீட் பண்ணேன். அதுல இருந்து நாங்க ரெண்டு பேரும் பழக ஆரம்பிச்சோம்
தினமும் 6 மணி ஆனா கரெக்டா எனக்கு போன் பண்ணுவாரு. 7:00 மணிக்கு நான் வசதி இல்லாத பசங்களுக்கு டிஎன்பிஎஸ்சி டியூஷன் நடத்துறேன் அப்படின்னு போன கட் பண்ணிடுவாரு .7:00 மணிக்கு மேல உங்க கூட பேசுவார் என்று இப்பதானே தெரியுது .. அவங்க வீட்டில குடியிருந்த பெண்ணுக்கு புருஷன் இல்லன்னு தெரிஞ்சு அவகிட்டயும் ராத்திரி நேரத்துல போன்ல பேசி பேசி ஆசைகளை தூண்டிவிட்டு இருக்கான் பாவம் அந்த அம்மா இந்த விஷயத்தை எல்லாம் கேள்விப்பட்ட உடனே தற்கொலை பண்ணிக்க கூட போயிட்டாங்களாம் என்று ரமேஷின் பித்தலாட்டங்களை இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டே இருந்தனர்
“எப்படியோ அவனோட வீட்டை கண்டுபிடித்து அவன் முகத்திரைய கிழிச்சிட்டீங்க “
உங்களுடைய அண்ணாவும் நம்ம விஷயங்களை வெளியே சொல்லாம வேற ஒரு கேஸ்ல போலீஸ் வச்சு அவன நல்லா கவனிக்க வைச்சிட்டாரு… ரொம்ப தேங்க்ஸ் சுதா என்று அருணா பேச்சை தொடர்ந்தாள்…
இதுல ரொம்ப பாவம் அவனோட மனைவி யும் பிள்ளைங்களும் தான் ..மனசு ஒடஞ்சு போயிட்டாங்க, இப்ப அவங்க அம்மா வீட்டுல இருக்கறதா கேள்விப்பட்டேன் சுதா என்று புலம்பிய அருணாவை பார்த்து என்ன செய்யறது ??ஆறுதலா பேசுறவங்கள நம்பறது நம்முடைய தப்பு , ஆனா நம்ம கிட்ட இருந்து வாங்குன பணத்தை வச்சுதான் பொண்டாட்டிக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கி கொடுத்து இருக்கான் பாருங்க!!
அதுதாங்க என்னால ஜீரணிக்கவே முடியல ..இப்ப கூட அவன் திருந்தி இருப்பான்னு எனக்கு நம்பிக்கை இல்லை அருணா என்று இருவரும் பேசிக்கொண்டே இருந்ததில் இருள் மெல்ல கவிய தொடங்கியது … ஆனால் அவர்கள் வாழ்வில் இருந்த இருள் விலகத் தொடங்கியது என்று எண்ணியபடி இருவரும் வீட்டிற்கு புறப்பட்டனர்..
பல ஆண்டுகாலம் கழித்து சந்தித்துக் கொண்ட சுதாவும் அருணாவும் தங்கள் குடும்பங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.. இன்று வரை இவர்கள் நெருங்கிய தோழிகள் தான். ஒளிவு மறைவு இல்லாமல் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள தவறுவதே இல்லை..
(தங்கள் பலவீனங்களை மற்றவர்கள் தெரிந்து கொள்ள அனுமதிக்காமல் இருக்க வேண்டும் என்பதே அவர்கள் கற்றுக் கொண்ட பாடமாய் இருந்தது)
உதவித்தொகை கேட்டால் தடியடியா?வீதியில் அலைகழிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள்:எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் மத்திய அரசை எதிர்பார்ப்பது?...சட்டசபையில் முதல்வர் ஆவேசம்
தொடர்ந்து 4வது நாளாக சரிந்து வரும் தங்கம் விலை: இதோ இன்றைய விலை நிலவரம்!
தமிழ்நாடு ராஜ்யசபா தேர்தல்... திமுக, அதிமுக கூட்டணிகளை முறைப்படுத்த உதவுமா?
“என் பெயர் ராமசாமி".. மனிதம் மலர்கையில் – பகுதி 2
தமிழ்நாட்டில் 6 ராஜ்யசபா காலியிடங்களுக்கு மார்ச் 16ல் தேர்தல்.. யாருக்கெல்லாம் மீண்டும் சீட்?
அவனே என் காதலன் …!
Wednesday Motivation: போகலாம் ரைட்....!
சாம்பல் புதன்.. கிறிஸ்தவர்களின் முக்கிய நிகழ்வு.. தெரிந்து கொள்வோமா.?
{{comments.comment}}