காதல் இன்று...!

Feb 14, 2026,03:40 PM IST

- பா.பானுமதி


கண்ணிய காதல் காணாமல் போனதோ...

புனிதமான காதல் புறம் தள்ள பட்டதோ...


உண்மை காதல் உருக்குலைந்து போனதோ...

உயர போய் உட்கார்ந்து கொண்டதோ...


கடை சரக்கு போல காசுக்கு கிடைத்து விடுகிறதோ 

இன்று தரம் இல்லாமல் தாழ்ந்து போனதோ நன்று?...




பொல்லாத காதல் புறப்பட்டு வந்து 

சூறாவளி போல் சுற்றி அடிக்கிறதோ...


நல்ல காதல் நலம் கெட்டு போய் நாடு கடந்ததோ...


இனியகாதல் இலக்கியங்களில் இடம் பெற்றுக் கொண்டதோ 

உளம் கனிந்த காதல் காவியங்களில் கரைந்து விட்டதோ...


வீதிகளில் வெளியிடங்களில் 

பொது இடங்களில் என எங்கும் காதல் மலிந்து கிடக்கிறதே...


உடல் காதல் உண்டாகி உணர்வு தூண்டி செண்டாகி 

பின் உதிர்ந்து வேறு திசைகளில் செல்வது சிறப்பு ஆகுமா...


கம்பன் சொன்ன காதல் என்றால் 

கல் மேல் எழுத்தாகுமே 

வள்ளுவன் சொன்ன காதல் என்றால் 

வாழ்க்கை சிறப்பாகுமே..


பாரதி சொன்ன காதல் என்றால் பாரதம் பேசுமே 

சங்க கால காதல்கள் சரித்திரம் தாண்டி நிற்குதே 


இக்கால காதல் மட்டும் 

விட்டுக் கொடுக்காமல் இடித்துக்கொண்டு உடையதே...


காதலர் தின களியாட்டம் விண்ணை முட்டுதே

விரைவில் மண்ணில் புதையுதே...


இது காலத்தின் கோலமா...

இந்த ஞாலத்தின் சாபமா...


விடை பகர்வார் யாரோ...?


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

news

ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்: தீவிரமடையும் விசாரணை

news

Malliga Selvaraj Poem: கோலங்கள்!

news

கோவில்களில் காட்டப்படும் தீபாராதனைகளுக்கு விதம் விதமான அர்த்தம் இருக்கு தெரியுமா?

news

கிருஷ்ணர் ஏன் ராதையைக் காதலித்து ருக்மணியை மணந்தார் தெரியுமா?

news

Chennai Marina beach: 140 வருஷத்துக்கு முன்னாடி மெரீனா கடற்கரை எப்படி இருந்துச்சு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்