பாக்கோடு: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ குடும்பத்துடன் சிக்கிக் கொண்டார். இதில் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ பரிதாபமாக உயிரிழந்தார். காரில் இருந்த அனைவரும் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் அவரது 65 வயது தாயார் மரியா கார்மல் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, பாலையூர் அருகே இவர்களது கார் லாரி மீது மோதியதாகத் தெரிகிறது. பாலக்கோடு காவல்துறையின் கூற்றுப்படி, கார் லாரியின் பின்னால் மோதியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மலையாளத்தில் பல்வேறு விதமான ரோல்களில் நடித்துப் பிரபலமானவர் ஷைன் டாம் சாக்கோ. தமிழிலும் கூட பீஸ்ட், குட் பேட் அக்லி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட அவர் பாலியல் அத்துமீறல் புகாரிலும் சிக்கி கைதாகி பின்னர் விடுதலையானார் என்பது நினைவிருக்கலாம்.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}