கோவை: கோவையில் உள்ள கே எம் சி எச் மருத்துவமனையில் ஒருவர் திருடன் முயன்றதாக கூறி, மருத்துவமனை ஊழியர்களே அவரை அடித்து கொலை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தற்போது கோவை தாந்திமா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜா கோவை அடையாற்று சாலையில் உள்ள கே எம் சி எச் மருத்துவமனைக்குள் புகுந்து அங்கிருந்த இரும்பு கம்பிகளை திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அவரை காவலாளிகள் தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயம் அடைந்த ராஜா மயக்கமடைந்தார். பின்னர் பதற்றம் அடைந்த மருத்துவமனை நிர்வாகிகள் அவரை அதே மருத்துவமனையில் அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ராஜா உயிரிழந்துள்ளார்.இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து ராஜாவின் மனைவி தன் கணவரின் மரணத்திற்கு நியாயம் கேட்டு பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கோவை மாநகர காவல் ஆணையர் ஸ்டாலின் தலைமையில், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் ராஜா அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
பின்னர் கே எம் சி எச் மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன், மருத்துவமனை ஊழியர்கள், காவலாளி உட்பட 15 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜாவின் குடும்பத்தார், ராஜா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், அப்போது அங்கு அவரை தவறுதலாக தாக்கி கொலை செய்யப்பட்டதாகவும், கூறி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் ராஜா அடித்து தான் கொலை செய்யப்பட்டாரா அல்லது என்ன காரணத்திற்காக மருத்துவமனைக்குள் வந்தார் என்ற விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக ESI மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தப் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று மதியத்திற்கு மேல் தெரியவரும். அப்போது ராஜா எப்படி இறந்தார் என்ற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}