சென்னை: படம் பேரு வித்தியாசமா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா.. அட படமும் அப்படி தானாம். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வருகிறதாம் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ் (once upon a time in madras).
ஃப்ரைடே ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் கேப்டன் எம் பி ஆனந்த் தயாரிப்பில் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பாலா ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் சி ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தை பிரசாத் முருகன் இயக்கியுள்ளார். காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்திற்கு ஜோஸ் பிராங்கிளின் இசையமைத்துள்ளார்.
இப்படம் ஹைபர் லூப் பின்னணியில் திர்லராக, மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வருகிறதாம். மேலும் ஒருவர் கையில் கிடைக்கும் துப்பாக்கி நாலு வெவ்வேறு நபர்களிடம் செல்லும்போது எப்படி அவர்கள் வாழ்க்கை மாறுகிறது என்பதை அரசியல் கலந்த கருத்துக்களைக் கொண்டு இப்படம் அமைக்கப்பட்டுள்ளதாம்.
இப்படத்தில் பரத், ஷான் மற்றும் ராஜாஜி ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். விருமாண்டி பட நாயகி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் கனிகா, தலை வாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ் கல்கி, சையத் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சென்னையை மையமாக வைத்து இப்படத்தின் நகர்வு இருப்பதால் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .விரைவில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தைப் பற்றி இயக்குநர் பிரசாத் முருகன் கூறுகையில்..
மனித வாழ்வில் சந்தர்ப்பம் தான் ஹீரோ, சந்தர்ப்பம் தான் வில்லன். ஒரு பொருள் ஒரு மனிதன் கையில் எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து தான் அவன் அப்பொருளை நன்மைக்கோ அல்லது தீமைக்கோ பயன்படுத்துவான்.
அப்படி நான்கு பேர் கைகளில் எதிர்பாராத விதமாக ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. வெவ்வேறு வாழ்வியலில் இருக்கும், அவர்களது வாழ்க்கையை, அந்த துப்பாக்கி எப்படி மாற்றுகிறது என்பதை கருத்தியல் அரசியலுடன், கமர்ஷியல் கலந்து பேசியுள்ளோம்.
தயாரிப்பாளர் கேப்டன் எம்.பி. ஆனந்த் படத்தின் உருவாக்கத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் செய்து கொடுத்தார். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது என கூறினார்.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}