சென்னை: சென்னையில் 2வது நாளாக பால், தயிர், பிரெட் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெங்காயம், தக்காளி கிடைத்தாலும் அவற்றின் விலையும் அதிகமாக உள்ளதாக மக்கள் புலம்பி வருகின்றனர்.
பெரும்பாலான கடைகளில் விலைகளை ஏற்றி வைத்து விற்கின்றனர். இதனால் மக்கள் படும் அவதி சொல்லி மாளாது.
மிச்சாங் புயலால், சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கன மழை பெய்தது. இந்த பாதிப்பிலிருந்து சென்னை நகரம் மிக மிக மெதுவாக மீண்டு வருகிறது. போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருகின்றன.

மழை ஓய்ந்த பின்னரும், வெள்ள நீர் வடியாமலும், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர் மக்கள். அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகமாகவே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 2வது நாளாக பால், தயிர், பிரெட் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
கடைகள் அதிக விலை
ஒரு சில பகுதிகளில் மட்டும் தான் இயல்பு நிலைக்கு வந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் நிலைமை இன்னும் சீராக வில்லை. குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் தக்காளி, வெங்காயம் போன்ற பொருட்கள் கிடைத்தாலும் அவற்றின் விலையும் அதிகமாக உள்ளது. விலை அதிகம் என்பதால் என்ன செய்வது என்று வாங்கவும் முடிய வில்லை, வாங்காமல் இருக்கவும் முடியவில்லை என்று பொது மக்கள் புலம்பி வருகின்றனர்.
அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் பொருட்களைத் தேடி மக்கள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வாட்டர் கேன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காரணம் பல இடங்களில் மின்சார சப்ளை இன்னும் சரியாகவில்லை. இதனால் வீடுகளில் ஆர் ஓ வைத்திருப்பார் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.

வாட்டர் கேன் தேடி மக்கள் அதிக அளவில் வருவதால் அவற்றின் விலையையும் உயர்த்தி விட்டனர். பல இடங்களில் கேன் கிடைப்பதில்லை. இதுவும் மக்களை பெரும் அவஸ்தைக்குள்ளாக்கியுள்ளது. 2015ம் ஆண்டு பட்ட அதே அவஸ்தைகளை இப்போதும் மக்கள் சந்தித்துள்ளனர்.
ஒரு சில இடங்களில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு சரியாகி இருந்தாலும், புறநகர் பகுதிகளில் இன்னும் சரியாக வில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தலைமை செயலாளர் சிவ தாஸ் மீனா கூறியுள்ளார். தமிழக அரசு போர்கால அடிப்படையில் ஏற்பாடுகள் செய்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், பொது மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ என்று கவலையில் உறைந்துள்ளனர்.
பெரும்பாலான இடங்களில் கரண்ட் இல்லாததால் பலர் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துகின்றனர். அதேபோல தண்ணீரை வாரி இறைக்க மோட்டார்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் டீசலுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. பல பெட்ரோல் பங்குக்குளில் கேன் கேனாக பலர் டீசல் வாங்கிச் செல்வதால் அதற்கும் பற்றாக்குறை சில இடங்களில் ஏற்பட்டுள்ளது.
படாதபாடு படும் வேளச்சேரி, பள்ளிக்கரணை
சென்னை நகரில் எப்போது புயல் வெள்ளம் வந்தாலும் கடுமையாக பாதிக்கப்படுவது வேளச்சேரியும், பள்ளிக்கரணையும்தான். இப்போதும் இவை கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. வேளச்சேரியின் பல பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியவில்லை. அதேபோல பள்ளிக்கரணையும் முழுமையாக பாதிப்பிலிருந்து மீளவில்லை.

பெரும்பாலான புறநகர்களில் இதே நிலைதான். பல தெருக்களில் வீடுகளில் புகுந்த தண்ணீர் இன்னும் வெளியேறாமல்தான் உள்ளது. அனைத்துத் தரப்பினரும் இணைந்து ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து கொண்டுதான் உள்ளனர். விரைவில் அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பி வர வேண்டும்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}