சிங்கப்பூரில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா... மாஸ்க் கட்டாயம்

Dec 24, 2023,09:31 AM IST

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் தற்போது கொரோனா பரவல் உச்சத்தில் இருப்பதால் மாஸ்க் அணிவது அந்நாட்டில் கட்டாயமாக்கப்பட உள்ளதாக சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் mயே குங் (ong ye kung) தெரிவித்துள்ளார்.


கடந்த நான்கு வாரங்களாக சிங்கப்பூரில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நவம்பர் 12 முதல் 18 வரையிலான காலத்தில் 10,726 ஆக இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை டிசம்பர் 10 முதல் 16 வரையிலான காலத்தில் 58,300 ஆக அதிகரித்துள்ளது. இந்த முறை சிங்கப்பூரில் கொரோனா பரவல் உச்சம் தொடும் என அங்குள்ள ஆசிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருவதாக சொல்லப்படுகிறது.




தற்போது வரப்போகும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் கொரோனா பரவலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் சிங்கப்பூர் மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். மாஸ்க் அணிவது கட்டாயம். உடல் நல பாதிப்பு உள்ளவர்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். சரியான தேதியில் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பாக வயதானவர்கள் அல்லது உடல்நலம் குன்றியவர்கள் வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். கொரொனா பரவலை பொறுத்து இனி வரும் நாட்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படும். கொரோனா தடுப்பு மருந்துகளை அதிக அளவில் வைத்துக் கொள்ள மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அதே சமயம் கடந்த 7 நாட்களில் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரத்தின் படி சிங்கப்பூரில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. டிசம்பர் 17 ம் தேதி கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 7730 ஆக இருந்த நிலையில், டிசம்பர் 18ம் தேதி 6820 ஆகவும், டிசம்பர் 19ல் இது 6530 ஆகவும் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. 


பொது இடங்களிலும், போக்குவரத்தின் போதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொரோனா பரவலை பொறுத்து மற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும்  ஓங் யே குங் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் வீரியம் ஒன்று முதல் ஒன்றரை ஆண்டு காலம் (அதாவது 18 மாதங்கள்) மட்டுமே நம்முடைய உடலில் இருக்கும் என்பதால், ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்