கேபிள் போடும்போது விபத்து.. ஊழியர் பலி..  சிங்கப்பூர் தமிழருக்கு 18 வாரம் சிறை!

Sep 07, 2023,03:56 PM IST
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கேபிள் பதிக்கும் பணியின்போது போர்க்லிப்ட் வாகனத்தின் மூலம் விபத்தை ஏற்படுத்தி சக ஊழியரின் மரணத்திற்குக் காரணமான இந்திய வம்சாவளி தமிழருக்கு 18 வார கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள ஆசியாபில்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் அழகப்பன் கணேசன். இவர் இந்தியாவைப் பூர்வீகமாக கொண்டவர். கடந்த 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம5ம் தேதி தான் வேலை பார்த்து வந்த இடத்தில் தான் இயக்கிய போர்க்லிப்ட் வாகனத்தை கவனக்குறைவாக இயக்கியதால் அதில் சிக்கி குஞ்சப்பா மகேஷ் என்ற இன்னொரு இந்தியத் தொழிலாளரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்து விட்டார் கணேசன்.



இதையடுத்து கணேசன் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் தற்போது கணேசனுக்கு 18 வார கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு பல அடுக்கு கார் பார்க்கிங் பகுதியில் இவர்கள் கேபிள் போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேபிள் ஒன்று போர்க்லிப்ட் மீது விழவிருந்தது. இதைப் பார்த்த குஞ்சப்பா மகேஷும், இன்னொரு ஊழியரும் வேகமாக கேபிளை தூக்கி மறுபக்கம் போட முயன்றனர். ஆனால் அந்த கேபிள் போர்க்பில்ட் வாகனத்தின் கியர் மீது விழுந்து அது வேகமாக வந்து குஞ்சப்பா மகேஷ் மீது மோதி அதில் அவர் உயிரிழந்து விட்டார்.

கணேசனைக் காப்பாற்ற கேபிளைத் தூக்கிப் போட்டார் குஞ்சப்பா மகேஷ்.. ஆனால் விதி இடையில் குறுக்கிட்டு அவரது உயிரைப் பறித்து விட்டது.

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்