- அ. தாமஸ்
இன்றைய எதிர்பார்ப்புகளே நாளைய மகிழ்வைத் தீர்மானிக்கிறது. விதைக்காத இடத்தில் பலனை எதிர்பார்க்கும் பொழுதே எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகின்றன.
நம் மதிப்புத் தெரியாத இடத்தில் மதிப்பையும், நம் அன்பை அளக்கத் தெரியாத இடத்தில் அன்பையும் எதிர்பார்ப்பது தான் நம் நிம்மதியை சிதைத்து நம் மனதை ரணமாக்குகிறது. எனவே நம்மை நினைப்பவரை மதிப்போம், மறுப்பவரை மறப்போம்.
எதிர்பார்ப்புகளே பல நேரங்களில் மாற்றங்களையும் சில நேரங்களில் ஏமாற்றங்களையும் பரிசளிக்கிறது. எனவே எதிர்பார்ப்பதில் எச்சரிக்கையாக இருங்கள்.

நம் வாழ்விடத்தின் சொர்க்கமே எதிர்பார்ப்பில்லாமல் வாழ்வதுதான். ஆனால் அத்தகு வாழ்வைக் கூட நாம் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறதே.
பல நேரங்களில் தகுதியான எதிர்பார்ப்புகளே நாளைய நாளுக்கு நம்மைத் தகுதிப்படுத்தி நிறை மகிழ்வையும்,மனநிறைவையும் கூட நமதாக்குகிறது.
நாளைய வெற்றிக்கு கடின உழைப்பும், தகுதியான எதிர்பார்ப்புமே தலையாய காரணிகள். எனவே தகுதியானதை எதிர்பார்த்து தன் முனைப்போடு தலை நிமிர்வோம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
இந்து தர்மத்தில் ஆண் பெண் வேறுபாடே இல்லை.. காரைக்கால் அம்மையார் கதை!
CREATE YOURSELF
தாயுமானவன்.. ஒரு நிமிடக் கதை (27)
கழுதை கெட்டா குட்டிச் சுவரு.. அறிவோம் பழமொழியின் உண்மை அர்த்தத்தை!
அன்பின் மொழி
இறுதி அஞ்சலி!
NEVER and EVER
Poetic raindrops trickling from Viji Venkatesh’s ink!
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
{{comments.comment}}