சென்னை: தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியான நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் “சைரன்” படத்தின் டீசர் பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளது.
தமிழ் திரையுலகில், தனித்துவமான ரசனைமிக்க படங்கள் மூலம், தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி. முதல் முறையாக சைரன் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றியுள்ளார்.
சைரன் படத்தின் துவக்கத்திலிருந்து ஒவ்வொரு அறிவிப்பிலும் படத்தின் மையக் கரு ஒவ்வொரு கட்டமாக வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் சைரனுடன் செல்லும் ஒரு ஆம்புலன்ஸின் புகைப்படம் டைட்டிலோடு வெளியானது. பின் முதிர்ந்த தோற்றத்தில் கைதியாக ஜெயம் ரவி கதாபாத்திரத்தின் தோற்றம் பிரிஃபேஸ் லுக்காக வெளியானது. தற்போது வெளியாகியுள்ள டீசர். சிறையிலிருக்கும் ஜெயம் ரவி கதாபாத்திரம் பரோலில் வெளிவருவதைக் காட்டுகிறது.

இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் சைரன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இணை தயாரிப்பு அனுஷா விஜய்குமார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு செல்வகுமார் S.Kயும், எடிட்டிங் ரூபனும் செய்துள்ளனர்.
மிகப்பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை நடிக்காத ஒரு புது கதாபாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடித்துள்ளார். முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் இணைந்துள்ளார்.

காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது. பரபரப்பான திருப்பங்களுடன், மாறுபட்ட கதைக்களத்தில், ஜெயம் ரவியின் வித்தியாசமான தோற்றத்தில் வெளியாகியிருக்கும் இந்த டீசர், படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}