சென்னை: சிங்கப்பூரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரர் குகேஷை, நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து பாராட்டியதுடன் பரிசு வழங்கியுள்ளார். அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் தனது வீட்டுக்கு அவரை வரவழைத்து வாழ்த்திப் பரிசு கொடுத்துப் பாராட்டினார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் லிரேனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இதனால் 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதைத் தொடர்ந்து இவரின் திறமையை பாராட்டி அனைத்து தரப்பிலும் பாராட்டுகள் குவிந்தன.
அந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டு, ரூபாய் 5 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.
சிவகார்த்திகேயன் ரசிகர்
இந்த நிலையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குகேஷ் நடிகர் சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகராம். இதனால் சிவகார்த்திகேயன் குகேஷை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன் கேக் வெட்டி கொண்டாடி ஒரு அழகான விலை உயர்ந்த வாட்ச் ஒன்றையும் பரிசாக வழங்கினார். குகேஷை பாராட்டி சிவகார்த்திகேயன் வாட்ச் அணிவிக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உலக பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்றை முருகதாஸ் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், டி. குகேஷை நேரில் வரவழைத்துப் பாராட்டி மகிழ்ந்தார். அவருக்குப் புத்தகம் ஒன்றைப் பரிசளித்த ரஜினிகாந்த், குகேஷுக்குப் பொன்னாடையும் போர்த்தினார்.
குகேஷின் தந்தை பெயரும் ரஜினிகாந்த்தான். அவரது தந்தை ரஜினி ரசிகர் என்பதால் ரஜினி பெயரை குகேஷின் தந்தைக்குப் பெயராக சூட்டினார் என்று சமீபத்தில்தான் குகேஷின் தந்தை இந்த சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}