வாஷிங்டன்: அமெரிக்காவில் மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக கடந்த 2 நாட்களில் 6 பெண் ஆசிரியைகள் அடுத்தடுத்து கைதாகியுள்ளது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் கென்டகியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், 16 வயதான 2 சிறார்களுடன் உறவு வைத்திருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.
டேன்வில்லியைச் சேர்ந்த எல்லன் ஷெல் (38), ஆர்கன்சாஸைச் சேர்ந்த ஹெதர் ஹரே, ஓக்லஹாமாவைச் சேர்ந்த எமிலி ஹான்காக், ஐயாவாவைச் சேர்ந்த கிறிஸ்டன் கான்ட் (36), விர்ஜீனியாவைச் சேர்ந்த அல்லியா கெர்டமான்ட் (33), ஹன்னா மார்த் ஆகியோரே கைது செய்யப்பட்ட ஆசிரியைகள் ஆவர்.
இதில் எல்லன் ஷெல், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு சிறுவனுடனும், ஆகஸ்ட் மாதத்தில் இன்னொரு சிறுவனுடனும் உறவு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இவர் உட்லான் என்ற தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வந்தார்.
ஆர்கன்சாஸ் ஆசிரியை ஹெதர் ஹரே ஒரு மாணவனுடன் தவறான உறவு வைத்திருந்தது தெரிய வந்து கைது செய்யப்பட்டார். அந்த சிறுவன் மைனர் வயதுடையவன் ஆவான்.
ஆசிரியை எமிலி ஹான்காக் மாணவனுடன் கட்டாய உறவு வைத்திருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் வெல்ஸ்டன் பப்ளிக் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை.
36 வயதான ஆசிரியை கிறிஸ்டன் கான்ட், சமூக வலைதளத்தைப் பயன்படுத்தி தனது மாணவனை திசை திருப்பி அவனுடன் உறவு வைத்துக் கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி வளாகத்திலேயே இவர் தனது செக்ஸ் உறவை வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. கிறிஸ்டின் கான்ட் ஆங்கில ஆசிரியை ஆவார். ஒரே மாணவனுடன் பள்ளி வளாகத்திற்குள் இவர் 5 முறை உறவு கொண்டுள்ளார்.
விர்ஜீனியாவைச் சேர்ந்த அல்லியா கார்டெமன்ட் பல மாதங்களாக ஒரு மாணவனுடன் உறவு வைத்துள்ளார். இவர் கற்றல் குறைபாடு உடைய மாணவர்களுக்கான ஆசிரியை ஆவார். இவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
உடற்பயிற்சி ஆசிரியையான ஹன்னா மர்த் ஒரு ஜாவலின் பயிற்சியாளரும் ஆவார். இவர் கடந்த 2021ம் ஆண்டு மைனர் வயதுடைய மாணவனுடன் உறவு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 6 ஆசிரியைகள் பாலியல் புகார்களில் சிக்கி கைதாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
{{comments.comment}}