மகின்வால் : பாஜக., எம்பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகை கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் பெண் கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதேசமயம், இந்த சம்பவத்தை நியாயப்படுத்த முயல்வது தவறானது என்று பாலிவுட்டைச் சேர்ந்த பல நடிகர் நடிகையர் குரல் கொடுத்து வருவதால் இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்துள்ளது.
பஞ்சாப்பின் கபுர்தலா மாவட்டம் மகின்வால் கிராமத்தை சேர்ந்தவர் குல்விந்தர் கவுர். சமீபத்தில் சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்த கங்கனா ரணாவத்தை குல்விந்தகர் கவுர், கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய கங்கனா ரணாவத், விவசாயிகள், பெண் விவசாயிகள் பணம் கொடுத்து போராட்டத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள். பஞ்சாப்பில் பயங்கரவாதம் மற்றும் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாக பேசி இருந்தார். விவசாயிகள் போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக கங்கனா பேசிய இந்த வார்த்தைகள் காரணமாக குல்விந்தர், கங்கனாவை அறைந்துள்ளார்.
எம்பி.,யான கங்கனாவை அறைந்ததற்காக குல்விந்தர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் குல்விந்தரோ, தன்னுடைய குடும்பத்தினரும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாகவும், அதை கொச்சைப்படுத்திய கங்கனாவை தன்னால் மன்னிக்க முடியாது என்றும் கூறி இருந்தார்.
இந்நிலையில் குல்விந்தருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப் சோஷியல் மீடியாக்களில் அவரை பாராட்டியும், அவருக்கு ஆதரவாகவும் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சீக்கிய அமைப்பினரும், விவசாயிகள் அமைப்பினரும் குல்விந்தரை அவரது செசாந்த கிராமத்திற்கு நேரில் சென்று பாராட்டி வருகின்றனர்.
பாலிவுட் நடிகர் நடிகையர் கண்டனம்
இதற்கிடையே, கங்கனா விவகாரத்தை நியாயப்படுத்த முயல்வது தவறானது. எந்த ஒரு விஷயத்திற்காகவும், பொது வெளியில் இதுபோல நடந்து கொள்வது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று பல்வேறு நடிகர் நடிகையர் குரல் கொடுத்துள்ளனர்.
நடிகர்கள் ரித்திக் ரோஷன், அலியா பட், சோனாக்ஷி சின்ஹா, ஜோயா அக்தர், சோனி ரஸ்தான், அர்ஜூன்க பூர், அனுபம் கெர், மிகா சிங், ரவீனா டாண்டன், சேகர் சுமன் உள்ளிட்டோர் கங்கனாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}