சென்னை: நடிகை சோனா தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு உருவாக்கியுள்ள ஸ்மோக் என்ற வெப்சீரிஸில் இயக்குனராகவும் களமிறங்கி அசத்தியுள்ளார்.
தமிழ் திரை உலகில் நடிகையாக ஒரு சுற்று சுற்றி வந்தவர் நடிகை சோனா. இவர் ஒரு காஸ்டியூம் டிசைனர். இவர் 2002 ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றவர். இவர் கோலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கவர்ச்சியில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் கலக்கியவர்.

2008 ஆம் ஆண்டு தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த குசேலன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தலான பெயரைப் பெற்றவர் நடிகை சோனா. இது தவிர சென்னையில் யுனிக் என்ற துணிக்கடையை நடத்தி தொழில் துறையிலும் சிறந்து விளங்கி வருகிறார். ஒரு சிறந்த நடிகையாகவும் தொழிலதிபராகவும் விளங்கிய நடிகை சோனா தற்போது ஷார்ட் ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ள ஸ்மோக் என்கிற வெப் சீரியஸின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
இந்த வெப் சீரிஸ் இவருடைய சொந்த வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு உருவாகி உள்ளதாம். அதனால் இந்த வெப்சீரிஸ் பல சீசன்களாக வெளியாக இருக்கிறதாம். இதில் தன்னுடைய சொந்த கதாபாத்திரத்தில் தானே நடிக்க இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.
இதில் ஆதினி (5 வயது), ஜனனி (14 வயது) மற்றும் ஆஸ்தா அபய் ( 30 வயது) ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

ஸ்மோக் சீசன் 1 வெப்சீரிஸ் நிறைவடையும் தருவாயில் உள்ளதாம். அதனால் இந்த வெப்சீரிஸ் வரும் கோடை விடுமுறை நாட்களில் ஷார்ட் ஃபிலிம்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவித்துள்ளது. இதில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் சமீபத்தில் யுனிக் ப்ரொடக்க்ஷன் வெளியிட்டபோது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. நடிகை சோனாவின் வாழ்க்கை அனுபவங்களை மையப்படுத்தி இந்த வெப்சீரிஸ் உருவாகி இருப்பதோடு, அவரே அந்த கதாபாத்திரத்தில் நடித்தும் இருப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இது பற்றி நடிகை சோனா கூறுகையில், புகை படர்ந்த கனவுகள் நிறைந்த வாழ்க்கையில், என்னவென்றே தெரியாத இடங்களுக்கோ அல்லது சூழல்களுக்கோ வாழ்க்கை எங்கே என்னை அழைத்து செல்லும் நிலையில் சரியாக என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. என்னுடைய கதையை சொல்வதால், கேட்கப்பட்ட கேள்விகள் அல்லது மறந்துபோன கேள்விகள், ஒளிந்துள்ள உண்மைகள் அல்லது சொல்லப்படாத உண்மைகள் குறித்து இதை இயக்கியுள்ளதுடன் அதில் அனைத்திலும் ஒரு பாகமாகவும் இருந்தேன். என் வாழ்க்கைக்குள் வந்து என்னை பாருங்கள் என கூறினார்.
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}