பார்சிலோனா: போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் டியோகோ ஜோடா ஸ்பெயினில் கார் விபத்தில் உயிரிழந்தது கால்பந்து உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 28.
லிவர்பூல் அணிக்காக விளையாடி 2024/25 சீசனில் பிரீமியர் லீக் கோப்பையை வென்ற அணியில் முக்கிய வீரராக இருந்தார். மேலும், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி UEFA நேஷன்ஸ் லீக் கோப்பையை வென்றதிலும் முக்கிய பங்கு வகித்தார். அவருடன் காரில் பயணித்த அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வாவும் உயிரிழந்தார். இவரும் கால்பந்து வீரர்தான்.
இந்த விபத்து ஸ்பெயினின் வடமேற்கு நகரமான Zamora-வில் நடந்துள்ளது. ஜோடாவுக்கு ஜூன் 22ம் தேதிதான் ரூட் கார்டோசோ என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு முந்தைய திருமணங்கள் மூலம் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

டியோகோ ஜோடாவின் மரணம் கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரராக இருந்தார். போர்ச்சுகல் அணிக்காகவும் பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது.
ஜோடாவுடன் விபத்தில் இறந்த அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வாவுக்கு 26 வயது. அவரும் ஒரு கால்பந்து வீரர். போர்ச்சுகலின் இரண்டாவது டிவிஷன் கிளப்பான பெனாஃபீலுக்காக விளையாடி வந்தார்.
டியோகோ ஜோடா போர்ச்சுகல் நகரமான போர்டோவில் பிறந்தார். அவர் பாசோஸ் டி ஃபெரைராவின் இளைஞர் அணியில் தனது கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கினார். 2016-ல் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கு மாறினார். 2017-ல் இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியான வ Wolverhampton Wanderers-க்கு சென்றது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இந்த அணிக்காக அவர் சிறப்பாக விளையாடியதால், 2020-ல் 45 மில்லியன் பவுண்டுகளுக்கு லிவர்பூல் அணிக்கு மாறினார். லிவர்பூல் அணிக்காக இரண்டு பிரீமியர் லீக் பட்டங்களை வென்றுள்ளார்.
அவர் தனது கிளப் வாழ்க்கையில் 398 போட்டிகளில் விளையாடி 136 கோல்கள் அடித்துள்ளார். மேலும் 66 அசிஸ்ட்களையும் செய்துள்ளார். போர்ச்சுகல் அணிக்காக 49 போட்டிகளில் விளையாடி 14 கோல்கள் அடித்துள்ளார். போர்ச்சுகலுடன் 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இரண்டு UEFA நேஷன்ஸ் லீக் கோப்பைகளை வென்றுள்ளார்.
டியோகோ ஜோடாவின் மரணம் கால்பந்து உலகிற்கு ஒரு பேரிழப்பு. அவரது திறமை மற்றும் அர்ப்பணிப்பு எப்போதும் நினைவில் கொள்ளப்படும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}