சென்னை: வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ், ட்விட்டர், பேஸ்புக் என அனைத்து சோசியல் மீடியாக்களிலும் விஜயகாந்தின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்தும், அவர்களுடைய நினைவுகளை பரிமாறியும் மக்கள் விஜயகாந்த்தின் நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.
கம்பீரமான நடை, நேர்கொண்ட பார்வை, எதற்கும் தளராத மனம், அனைவரிடமும் அன்பாக பழகும் எளிமை, தாய்மை உள்ளம் படைத்த கர்ணன்.. என பல சிறப்புகளை பெற்ற கேப்டன் விஜயகாந்த் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்த செய்தி கேட்டு திரை நட்சத்திரங்கள், கட்சித் தொண்டர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் சோகத்தில் மூழ்கினர். யாராலும் வெறுக்க முடியாத அரசியல் தலைவராக வலம் வந்தவர் விஜயகாந்த். நல்ல உள்ளம் படைத்த விஜயகாந்தை.. நாம் இழந்து விட்டோமே.. இனி ஒரு பிறவியிலும் இதுபோன்ற மனிதரை நாம்மால் பார்க்க முடியுமா.. என்று பலரும் தங்களின் வேதனைகளையும், வருத்தங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக வலைதளங்கள் அனைத்திலும் கேப்டன்தான் நீக்கமற நிறைந்துள்ளார். பலரும் தங்கள் வாட்ஸ் அப் டிபி களில் விஜயகாந்த் புகைப்படத்தை வைத்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அவர் நடித்த படங்களின் சிறப்புகளைப் பேசியும், அவர் நடித்த படங்களின் வசனங்களை பற்றியும் சிலாகித்து பதிவிட்டு வருகின்றனர்.
வாட்ஸ் ஆப் குரூப்கள் அனைத்திலும் வழக்கமான பகிர்வுகளை நிறுத்தி விட்டு விஜயகாந்த் குறித்து மட்டுமே பலரும் பகிர்ந்து வருகின்றனர். அவரது படங்களில் இடம் பெற்ற பாடல்கள், வசனங்கள் உள்ளிட்டவற்றை ஷேர் செய்கின்றனர்.
ரமணா படத்தில் அவர் கிளைமேக்ஸ் காட்சியில் பேசும் வசனத்தை பலரும் ஷேர் செய்கிறார்கள். அதேபோல பூந்தோட்டக் காவல்காரன் படத்தில் வரும் விஜயகாந்த்தின் மரணக் காட்சியையும் பலர் ஷேர் செய்து வருகிறார்கள்.
பேஸ்புக் பக்கங்கள், ட்விட்டர் பக்கங்கள் என அனைத்து சோசியல் மீடியாக்களிலும் விஜயகாந்த்தான் நீக்கமற நிறைந்திருக்கிறார். பொது மக்கள் கூடும் டீக்கடை, வணிகதலங்கள் உள்பட எங்கு பார்த்தாலும் விஜயகாந்த் குறித்த பேச்சுதான் அதிகம் உள்ளது.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}