Junior Wife தேவை.. விளம்பரம் கொடுத்த சாப்ட்வேர் என்ஜீனியர்.. வந்து குவிந்த வசவுகள்!

Apr 10, 2024,06:59 PM IST

டெல்லி: ஜூனியர் வைஃப் தேவை என்று லிங்க்ட்இன் தளத்தில் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர் கொடுத்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பேசும்போதும் சரி, எழுதும்போதும் சரி.. வார்த்தை.. அந்த வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். பலரும் லூஸ் டாக்கில்தான் சிக்கி சங்கடங்களைச் சந்திப்பார்கள். அப்படி ஒருவர் சிக்கி வறுபட்டு வருகிறார்.


அவரது பெயர் ஜிதேந்திரா சிங். இவர் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். இவர் தனது லின்க்ட்இன் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்த வார்த்தைதான் இப்போது சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.  அதாவது தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள  பெண்  தேவை என்பதைத்தான் அவர் வில்லங்கமாக சொல்லியிருந்தார். அதை அவர் கொடுத்திருந்த விதத்தைப் பாருங்களேன்




#hiring அவசரம் 


எனது வாழ்க்கையில் இணைவதற்கு ஒரு "Junior Wife" தேடிக் கொண்டிருக்கிறேன்.


குறிப்பு - அனுபவம் வாய்ந்த கேன்டிடேட் ( Wifes ) இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம். அவர்களை நான் பின்னர் தனியாக  சந்தித்துக் கொள்கிறேன்.


வேலை வகை: வாழ்க்கை முழுவதும்


கெரியர் லெவல்  - என்ட்ரி லெவல் (முற்றிலும் அனுபவம் இல்லாதவர்கள் மட்டுமே தேவை)

சம்பளம் - ரகசியம்


மொத்தம் 3 சுற்றுக்களாக நேர்முகத் தேர்வு நடைபெறும். இறுதிச் சுற்று - நேருக்கு நேர்.


தேவையானவை


- சமையலில் குறைந்தது 2 ஆண்டு அனுபவம் தேவை. 

- இரவில் எழுந்து, எனக்கு மணக்க மணக்க பிரியாணி செய்து கொடுக்கக் கூடிய திறமை இருக்க வேண்டும்

- நல்ல தகவல் தொடர்பு திறமை இருக்க வேண்டும்

-- மரியாதைக்குரியவராக, நாகரீகமானவராக இருக்க வேண்டும்

- கீழ்ப்படிதல் அவசியம், அன்பு செலுத்துபவராக இருக்க வேண்டும்

- கோல் ஓரியன்டட் ( நான் என்னெல்லாம் வேலை செய்கிறேனோ அதையெல்லாம் புரிந்து கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும்)


விருப்பமானவர்கள், எனது இன்பாக்ஸுக்கு சுயவிவரத்தை அனுப்பி வைக்கலாம் என்று அந்த நபர் கூறியுள்ளார். இந்த விளம்பரம்தான் பலரையும் கடுப்பாக்கியுள்ளது.


என்ன முட்டாள்தனம் இது என்று பலரும் அவரை சாடி வருகின்றனர். மிகவும் தொழில்முறையிலான தளமான லிங்க்ட்இன் எப்படி இதையெல்லாம் அனுமதிக்கிறது. இதுபோன்ற முட்டாள்தனத்தை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் போய் காட்டட்டும்.. இங்கு ஏன் என்று பலரும் சாடியுள்ளனர். ஆனால் ஜிதேந்திரா சிங்கோ, இது ஜாலியான பதிவுதான். சீரியஸாக எடுத்துக்காதீங்க என்று கூறியுள்ளார். 


அது சரி, தம்பி நீங்க ராத்திரி நினைச்ச நேரத்துக்கு பிரியாணி கேட்டா உடனே அடிச்சு பிடிச்சு, தலை முடியை அள்ளி முடிஞ்சு, விறுவிறுன்னு கிச்சனுக்கு ஓடிப் போய் செஞ்சு கொடுப்பாங்கன்னு பத்தாம்பசலித்தனமாக நம்பறீங்க பாருங்க.. அங்கதான் நீங்க நிக்கறீங்க.. 20 வருஷத்துக்கு பின்னாடி போய்!


திருந்துங்க பாஸ்.. திருந்துனா போனா போகுது பாவம்ன்னு  டீயாவது போட்டுத் தருவாங்க.. இப்படியெல்லாம் சாவனிஸ்ட்டா பேசிட்டிருந்தா. பேரீச்சம்பழம் கூட வாங்கித் தர மாட்டாங்க.. ப்ரோ!

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்று திடீர் குறைவு... எவ்வளவு தெரியுமா?

news

வாழப்பாடி வெள்ளாள குண்டம் ராஜலிங்கேஸ்வர் சிவன் கோவில் நந்தியைப் பார்த்திருக்கீர்களா?

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

news

ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது

அதிகம் பார்க்கும் செய்திகள்