டில்லி : காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்தான் மாநிலத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா இடத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சொந்தமாக கார் கூட கிடையாது என அவரது பிரமான பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோனியா காந்தி 2006ம் ஆண்டு முதல் ரேபரெலி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு, எம்பி.,யாக இருந்து வந்தார். தற்போது உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் ராஜ்யசபாவிற்கு போட்டியிட முடிவு செய்து, ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டியிடுவதற்காக சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதோடு அவர் இணைத்திருந்த பிரமான பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பு உள்ளிட்ட விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் தான் கடந்த இரண்டு நாட்களாக சோஷியல் மீடியாவில் அதிக பேசப்படும் விஷயமாக மாறி உள்ளது.

சோனியா காந்தி தன்னுடைய பிரமான பத்திரத்தில் குறிப்பிட்டிருந்த தகவல்களின் அடிப்படையில், அவரது சொத்து மதிப்பு ரூ.12.53 கோடி தானாம். கடந்த லோக்சபா தேர்தலில் அவர் தாக்கல் செய்ய பிரமான பத்திரத்தில் குறிப்பிட்டிருந்த சொத்து மதிப்புடன் ஒப்பிட்டு பார்த்தால் கடந்த ஐந்து ஆண்டுகளில் இவரின் சொத்து மதிப்பு ரூ.72 லட்சங்கள் மட்டுமே அதிகரித்துள்ளது. மேலும் அவர் குறிப்பிட்டிருந்த விபரங்களின் படி, அவருக்கு சொந்தமாக வாகனம் ஏதும் கிடையாதாம். அதே சமயம் இத்தாலியிலும் தனக்கு சொத்து இருப்பதாக சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இத்தாலியில் தன்னுடைய அப்பா தனக்கு அளித்த பங்காக சொத்துக்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.26 லட்சத்திற்கும் அதிகம். இது தவிர 88 கிலோ வெள்ளி, 1267 கிராம் தங்கம் மற்றும் தங்க நகைகள், 2529.28 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட விவசாய நிலம் டில்லிக்கு அருகில் உள்ள தீரா மண்டி என்ற கிராமத்தில் உள்ளது. இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.5.88 கோடியாகும். இதோடு எம்பி சம்பளமாக தான் இதுவரை பெற்ற தொகை, வங்கி முதலீடுகள் மூலம் கிடைக்கு வட்டி உள்ளிட்ட இதர வருமானங்கள் குறித்த விபரங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோனியா காந்தி penguin book india, oxford university press, ananda publishers, continental publications ஆகியவற்றுடன் போட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவருக்கு காப்புரிமையாகவும் குறிப்பிட்ட தொகை வருமானமாக வருவதாக சொல்லப்படுகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பிரஸ் மூலமாக மட்டும் ரூ.1.69 லட்சம் கிடைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சோனியா காந்தி மீது, சுப்ரமணிய சாமி தொடர்ந்து நேரஷனல் ஹெரால்டு வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இது தவிர டில்லி ரவுஸ் அவென்யூ கோர்ட்டில் சட்டப்பிரிவு 420, 120பி, 403, 406 ஆகிய பிரிவுகளின் கீழ் சோனியா காந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சின்னசேலம் தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் ஹைக்கூ திருவிழா
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெந்தயக் களி
கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!
உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
4 மணிக்கு எழுவது எப்படி? அற்புத பலன்களை கொடுக்கும் அதிகாலை.. எளிதாக்கும் சிறந்த டிப்ஸ்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
{{comments.comment}}