கருணாநிதி நினைவு நாள்.. நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி

Aug 07, 2023,02:50 PM IST
டெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதேபோல டெல்லியிலும் நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம் இன்று. இதையொட்டி சென்னையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த பேரணியில் மாநில அஏமைச்சர்கள்,எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



அமைதிப் பேரணி கடற்கரை கருணாநிதி நினைவிடத்தில் முடிவடைந்தது. அங்கு மலர் தூவி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல தமிழ்நாடு முழுவதும் கருணாநிதியின் உருவப் படங்கள், சிலைகளுக்கு திமுகவினர், கூட்டணிக் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.



நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதியின் புகைப்படத்திற்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். கூட்டணிக் கட்சி எம்பிக்களும் அஞ்சலி செலுத்தினர்.

சமீபத்திய செய்திகள்

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்