சென்னை: சென்னையின் முக்கிய போக்குவரத்து சேவைகளான பஸ், மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில் ஆகியவற்றைப் பயன்படுத்தும் மக்களுக்கு ஒரு அருமையான திட்டத்தை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் (கும்தா) வகுத்துள்ளது.
இதற்காக தனி செயலி அறிமுகப்படுத்தப்படும். அதில், ரீசார்ஜ் செய்து கொண்டு மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் புற நகர் ரயில்களில் பயணிக்கலாம்.
மக்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு போக்குவரத்து சேவை மிகவும் இன்றியமையாததாக உள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக சென்னை போன்ற பெருநகரங்களில் எத்தனை பஸ் விட்டாலும், ரயில் விட்டாலும் போதாது. அந்த அளவுக்கு கூட்டம் இருக்கிறது. மேலும் சென்னையில் பஸ்கள், ரயில்கள், மாடி ரயில், மெட்ரோ ரயில் என பல வகையான போக்குவரத்து உள்ளது. ஒவ்வொன்றையும் பயன்படுத்தும்போது பெரும் அயர்ச்சியாக இருப்பது இந்த டிக்கெட் எடுப்பதுதான். இந்தப் பிரச்சினையை தற்போது சரி செய்யப் போகிறார்கள்.

சென்னையில் உள்ள பஸ், மெட்ரோ ரயில், மின்சார ரயில் போன்ற போக்குவரத்து சேவைகளில் இதுவரை தனித்தனியான பயணச்சீட்டு வாங்கி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பஸ், மெட்ரோ ரயில், மின்சார ரயில்கள் ஆகிய அனைத்திற்கும் ஒரே டிக்கெட் என்ற திட்டம் நடைமுறையில் கொண்டு வர சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இயக்கப்படும் பஸ், மெட்ரோ ரயில், மின்சார ரயில் ஆகியவற்றிற்கு ஒரே டிக்கெட் என்ற திட்டம் வரும் டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக கும்தா அமைப்பு ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
டிசம்பர் முதல் வாரத்தில் முதல் கட்டம் அமலாக வாய்ப்பு
சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்தா) அதில் கூறியிருப்பதாவது:
பன்னோக்கு பயணச் சீட்டு திட்டம் தொடர்பான மொபைல் செயலியை உருவாக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அதேபோல க்யூ ஆர் கோடு அடிப்படையிலான டிக்கெட் முறைக்கும் டெண்டர் விடப்பட்டுள்ளது. இதுதொடர்பான நடைமுறைகள் முழுமை அடையவில்லை. ஜூன் அல்லது ஜூலை மாதம் டெண்டர் முடிவு செய்யப்படும். அதன் பின்னர் செயலின் முதல் கட்ட செயல்பாடு டிசம்பர் மாதம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த ஸ்மார்ட் கார்ட் வைத்திருந்தால் போதும், பஸ்களில் ஏறலாம், ரயிலில் போகலாம், மெட்ரோவிலும் ஜாலியாக பயணிக்கலாம்.. இந்த ஆண்டு இறுதியில் ரொம்ப சிம்பிளாக மாறப் போகிறது சென்னையின் போக்குவரத்து சேவைகள். வருகிற புத்தாண்டுக்கு சென்னை மக்களுக்கு அளிக்கப்படும் சிறந்த பரிசாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}