புதுடில்லி: தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வாய்ப்பில்லை. அப்படி எந்த பேரிடரும் இதுவரை அறிவிக்கப்பட்டதில்ல என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட பணிகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் விரிவான பேட்டி ஒன்றை அளித்தார். அவரது பேட்டியிலிருந்து:
தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று டிசம்பர் 12ஆம் தேதி முதல் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்து இருந்தது. மழை பாதித்த அன்றும் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பதிவு செய்யப்பட்டது. எவ்வளவு மழை பெய்யும் என்று சொல்ல முடியாது. கனமழை பெய்யும் என்று கொடுத்த பின்னும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்காமல் இருந்தது ஏன்? பாதிப்பு நடந்த இடத்திற்கு அமைச்சர்கள் அதிகாரிகள் தாமதமாக சென்றது ஏன்?
தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது:
தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது. உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இயற்கை பேரழிவுகள் ஏற்பட்ட போது கூட தேசிய பேரிடர் என அறிவிக்கவில்லை. தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை மாநில பேரிடர் என மாநில அரசு அறிவிக்க நினைத்தால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும். அதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு அதிகாரிகள் செய்வர்.
வெள்ள தடுப்பு நடவடிக்கைக்காக செலவு செய்த 4000 கோடி எங்க போனது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டு வானிலை ஆய்வு மையம் குறை கூறுவது ஏன்? 2015 வெள்ள பாதிப்பிலிருந்து தமிழக அரசு என்ன கற்றுக் கொண்டது அதிலிருந்து எடுத்த நடவடிக்கைகள் என்ன மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த தமிழக முதல்வர் என்ன செய்து கொண்டு இருந்தார்.
தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன:
மழை குறித்து துல்லியமான கணக்கு இல்லை என்கிறார்கள் சரி. கனமழைக்கு அவர்கள் எடுத்த நடவடிக்கை தான் என்ன? எங்கே இருந்தார்கள். தமிழக முதல்வர் திருநெல்வேலி போனார், அங்கு இருந்து பேசினார். ஆனா அஞ்சு நாளைக்கு முன்னாடி அதே முதலமைச்சர் எங்க இருந்தாரு.. வரலாறு காணாத மழை மக்கள் கஷ்டபடுகிறார்கள் மத்திய அரசு என்டிஆர்எப் கொடுத்து அனுப்புங்கன்னு செல்லி இருக்கலாம்.
எங்க இருந்தாரு. டில்லியில. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் ஆலோசணையில் இருந்தார். கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை முடித்து போகிற போக்கில் தான் பிரதமர் மோடியை மு க ஸ்டாலின் சந்தித்து பேசினார். இப்படி இருக்க மத்திய அரசை குறை கூறுவது சரியா என்று கேட்டார் நிர்மல் சீதாராமன்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}