சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தென்மேற்குப் பருவ மழை முன்கூட்டியே மே 19 இல் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தவிர கர்நாடகா மற்றும் கேரளாவிலும் இன்று முதல் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து தற்போது கோடை கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் சாதகமான காலநிலை நிலவி வருகிறது. குமரி கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்னும் ஐந்து தினங்களுக்கு பரவலாக மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின்படி தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை, நல்ல மழை கொடுக்கக் கூடிய காலநிலை. இந்த தென்மேற்கு பருவ மழை ஒவ்வொரு வருடமும் ஜூன் முதல் செப்டம்பர் வரை நான்கு மாத காலம் நீடிக்கும். இந்த தென்மேற்கு பருவ மழை முதலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தொடங்கி பின்னர் படிப்படியாக கேரளாவில் மழை பெய்ய ஆரம்பிக்கும். ஆனால் இந்த வருடம் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்க கடல், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவ மழை வரும் மே 19ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாம். அதனால் கேரளாவிலும் ஜூன் ஒன்றாம் தேதியே தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்க்கலாம். மேலும் இந்தப் பருவ மழை ஜூன் மத்தியில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்கள் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கர்நாடகாவைப் பொறுத்தவரை இன்று முதல் 3 நாட்கள் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் நீலகிரி திருநெல்வேலி கன்னியாகுமரி தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக கோவை மாவட்டம் மாக்கினாம்பட்டியில் 8 சென்டிமீட்டர் மழை பதிவானது. பொள்ளாச்சி மற்றும் தூத்துக்குடியில் தலா 7 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
கோவை மாவட்டம் ஆழியார், ஸ்ரீவில்லிபுத்தூர், நத்தம், வீரபாண்டி, நீலகிரி-பார்வுட் எஸ்டேட்டில் தலா ஆறு சென்டிமீட்டர் மழை பதிவானது. குமரி மாவட்டம் கலியல், மயிலாடி, கோவை மாவட்டம் சின்கோனாவில் தலா 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}