சென்னை : தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள தேதி ஆகஸ்ட் 14 ல் இருந்து ஆகஸ்ட் 18 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை கடற்கரை- தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஆகஸ்ட் 14 வரை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேயான 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. ரத்து செய்யப்பட்டதற்கு மாறாக சிறப்பு ரயில்களும் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம்- செங்கல்பட்டு, கடற்கரை - செங்கல்பட்டு-கடற்கரை இடையேயான புறநகர் ரயில்களின் சேவை ஆகஸ்ட் 18ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆகஸ்ட் 14 வரை இருந்த ரயில்கள் ரத்து, தற்போது ஆகஸ்ட் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி - செங்கோட்டை இடையேயான ரயில்வே பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செங்கோட்டை ரயில்கள் அனைத்தும் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை- செங்கோட்டை ரயில் சேவை தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}