தைப்பூசம் 2025.. வைகை எக்ஸ்பிரஸ்.. மேல்மருவத்தூரில் 2 நிமிடம் நிற்கும்.. பிப்ரவரி 11ம் தேதி வரை!

Dec 28, 2024,05:13 PM IST

சென்னை: 2025 ஆம் ஆண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில், மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதிலும் இங்கு பிப்ரவரி மாதத்தில் கொண்டாடும் தைப்பூச திருவிழா மிகவும் விசேஷமானது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். அந்த வரிசையில்  2025 ஆம் ஆண்டுக்கான தைப்பூச திருவிழா பிப்ரவரி 11ஆம் தேதி வருகிறது.




முன்னதாக 2024-25 ஆம் ஆண்டிற்கான சக்தி மாலை இருமுடி தேதி  டிசம்பர் 15, 2024  அன்று தொடங்கி பிப்ரவரி 10 வரை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 11-ம் தேதி தைப்பூச விழா நடைபெற இருப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


அதன்படி தற்போது பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து இருமுடி சுமந்து கோயிலுக்கு வர துவங்கியுள்ளனர். இதற்காக பக்தர்களிள் சிரமத்தை தவிர்ப்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை ஒவ்வொரு வருடமும் செய்து வருகிறது.

  

கடந்த ஆண்டு இருமுடி மற்றும் தைப்பூச விழாவை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக இரண்டு நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்த வசதி  பயனுள்ளதாக இருப்பதாக பக்தர்கள் மிகுந்த வரவேற்பு அளித்தனர். 


அதேபோல் 2024 -2025 ஆம் ஆண்டுக்கான தைப்பூசம் மற்றும் இருமுடித் திருவிழாவை முன்னிட்டு வைகை எக்ஸ்பிரஸ் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தைப்பூசம் மற்றும் இருமுடி திருவிழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12635) மேல்மருவத்தூரில் இரண்டு நிமிடங்கள் தற்காலிகமாக நின்று செல்லும். இந்த நடைமுறை இன்று அதாவது டிசம்பர் 28 முதல் பிப்ரவரி 11 வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சான்டாவுக்கே கிப்ட் கொடுத்த அந்த மொமன்ட்.. A Gift To Santa!

news

2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!

news

2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்

news

அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!

news

அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!

news

தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!

news

மறைவேடங்கள் நிறைந்த இவ்வுலகில்.. In the world of disguise

news

அன்புக்குரிய சான்டா.. Santa, the classy lovable one!

news

பிறந்தார் இயேசு பாலன்.. கொண்டாடுவோம்.. Merry Christmas, Merry Christmas!

அதிகம் பார்க்கும் செய்திகள்