சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களுக்கும் தீபாவளி கொண்டாட சென்ற பொதுமக்கள் இன்று இரவு மீண்டும் சென்னைக்குத் திரும்பவுள்ள நிலையில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையிலும், மக்கள் எளிதாக நகருக்குள் வரும் வகையிலும் சிறப்பு பாசஞ்சர் ரயில்களை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நாளை காலை இயக்கவுள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக கிட்டத்தட்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் சென்றுள்ளனர். தீபாவளி விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் மக்கள் இன்று இரவு பெருமளவில் சென்னைக்குத் திரும்பவுள்ளனர். காலை முதலே மக்கள் சென்னைக்குக் கிளம்ப ஆரம்பித்து விட்டனர். இன்று இரவு வரும் ரயில்கள், பஸ்களில் பெருமளவிலான மக்கள் நாளை அதிகாலை சென்னை வந்து இறங்குவார்கள்.

இதையடுத்து பயணிகளின் நலனுக்காக, காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் வரை சிறப்பு பாசஞ்சர் ரயில்களை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் இயக்கவுள்ளது. இந்த ரயில்கள் அதிகாலை 4 மணி, 4.30, 5 மணி, 5.45, 6.20 ஆகிய நேரங்களில் இந்த ரயில்கள் தாம்பரத்திற்கு இயக்கப்படும். அனைத்து ரயில்களும் பொத்தேரி ரயில் நிலையத்தில் 5 நிமிடங்களுக்கு நிற்கும்.
அதேபோல தாம்பரத்திலிருந்து 2 சிறப்பு பாசஞ்சர் ரயில்கள் காலை 5.05 மற்றும் 5.40 மணிக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகளுக்கு இந்த ரயில்கள் உதவியாக இருக்கும். இதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}