கும்பாபிஷேகம், தைப்பூசம் எதிரொலி.. பழனிக்கு 5 நாட்கள் சிறப்பு ரயில்கள்

Jan 27, 2023,10:10 AM IST
மதுரை: பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத் தொடக்க விழாவையொட்டி பழனிக்கு 5 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.



பழனியில் இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பழனிக்கு மதுரை, திண்டுக்கல், கோவையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். நேற்று முதல் இவை தொடங்கியுள்ளன.

மதுரையிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு, சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக 12.30 மணிக்கு பழனி வந்தடையும்.

பழனியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை சென்றடையும்.

கோவை-திண்டுக்கல் சிறப்பு ரயில் காலை 9.20 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியக 11.38 மணிக்கு பழனி வந்து சேரும். மறுமார்க்கத்தில் பழனியில் இருந்து 11.43 மணிக்கு புறப்பட்டு ஒட்டன்சத்திரம் வழியாக 1 மணிக்கு திண்டுக்கல் போய்ச் சேரும். 

திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.55 மணிக்கு பழனி வந்து சேரும். மறுமார்க்கத்தில், 3 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவையை சென்றடையும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்