தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நீரில் மிதக்கிறது. இதற்குக் காரணம் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 932 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்து தீர்த்ததுதான்.
ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் காயல் பட்டனமே கடல் கொண்ட நகர் போல மாறிக் காட்சி தருகிறது. மொத்த ஊரில் நீரில் மிதக்கின்றது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டிலேயே அதீத மழைப் பொழிவைக் கண்டது காயல்பட்டனம்தான். கடந்த 1992ம் ஆண்டுக்குப் பிறகு 2வது அதிக அளவிலான மழைப் பொழிவு காயல்பட்டினத்தில்தான் பெய்துள்ளது. இதற்கு முன்பு 1992ம் ஆண்டு மாஞ்சோலைக்குட்பட்ட கக்காச்சி என்ற இடத்தில் 965 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் 618, திருச்செந்தூரில் 679 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பல ஊர்களில் 300 மில்லி மீட்டருக்கும் மேலான மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலேயே திருச்செந்தூர் தாலுகாவில்தான் அதீத மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதற்கு அடுத்த கன மழை சாத்தான்குளம், கோவில்பட்டி தாலுகாக்ககளில் பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் இதற்கு முன்பு 24 மணி நேரங்களில் அதிக அளவிலான மழைப் பொழிவை பெற்ற பகுதிகள் பெரும்பாலும் மலைப் பகுதிகளாகவே இருக்கும். ஆனால் நிலப்பரப்பில் மிகப் பெரிய அளவில் மழை கொட்டியது காயல்பட்டினத்தில்தான் முதல் முறையாகும்.
24 மணி நேரத்தில் 900 மில்லி மீட்டர் மழை இதற்கு முன்பு 2 முறை பெய்துள்ளது. 1992ல் கக்காச்சியில் 965 மில்லி மீட்டர், 2019ம் ஆண்டு அவலாஞ்சியில் 911 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 800 மில்லி மீட்டருக்கும் மேலான மழை 3 முறை பதிவாகியுள்ளது. 1992ல் மாஞ்சோலை (821), 2009ல் கெட்டி (820), 2019ல் அவலாஞ்சி (820) பெய்துள்ளது.
இதுதவிர 1958ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 713 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் 2008ம் ஆண்டு 656 மில்லி மீட்டர் மழை பெய்து வெள்ளக்காடாக்கியது.
சென்னை சுற்று வட்டாரத்தில் 2 முறை அதீத கன மழை கொட்டியுள்ளது. 1846ம் ஆண்டு நகர்ப் பகுதியில் 550 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதேபோல 1970ம் ஆண்டு மகாபலிபுரத்தில் 540 மில்லி மீட்டர் பெய்துள்ளது. எல்லா வகையிலும் காயல்பட்டனம் மிகப் பெரிய சாதனையைப் படைத்துள்ளது. ஆனால் அது பெரும் சோதனையாக மாறியதுதான் வேதனை.
முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!
தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் பெயர்.. யார் அவர்?
விழாக்கோலம் பூண்ட புதுச்சேரி.. சீக்கிரமே வந்து விஜய்.. பேச்சைக் கேட்க திரண்ட தவெக தொண்டர்கள்!
Movie review: வசூலை வாரிக் குவிக்கும் தேரே இஷ்க் மேய்ன்.. எப்படி இருக்கு படம்?
நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயசு.. பழமொழியும் உண்மை பொருளும்!
ஓம்கார ஹரியே .. ஒம் ஒம்ஹரியே கோவிந்தஹரியே .. கோவர்த்தனம் சுமந்த ஹரி நீ!
பேரின்பப் பெருவாழ்வு பெற்று உய்க... தேவாரத் தலங்களின் விளக்கமும், செல்லும் வழிகளும்!
நவதானிய லட்டு.. கர்ப்பிணிப் பெண்களுக்கு சூப்பரான உணவு.. ரத்தம் ஊறுமாம்!
சுண்டலான்னு.. கிண்டலா கேட்காதீங்க பாஸ் .. புரதங்களின் அரசன்.. குழந்தைகளின் சிறந்த snacks!
{{comments.comment}}