திருநெல்வேலி: பாஜகவில் இருந்து ரஜினியை அரசியலுக்கு கொண்டு வர முயற்சித்தார்கள். அவர் வரவில்லை. அவருக்கு பதிலாக விஜய்யை ஏற்பாடு செய்து இறக்கி இருக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து விவசாய சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு. அப்போது செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசுகையில்,பாபநாசம் அணையில் இன்று திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் சுமார் 86,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயன்பெறுவார்கள். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. 400 கோடி ரூபாயில் 3 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்யும் அளவுக்கு குடோன்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
தவெக மாநாட்டிற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், நானும் வாழ்த்துச் சொல்லிக் கொள்கிறேன்.விஜய் கட்சி ஆரம்பித்ததில் யாருக்கும் ஆட்சேபனை கிடையாது. ஏற்கனவே பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில் நடிகர் விஜய்யும் கட்சி ஆரம்பித்துள்ளார். அதை நான் வரவேற்கின்றேன். திமுக பணம் சம்பாதிப்பதாக விஜய் சொல்லி இருக்கிறார். புதிதாக கட்சி தொடங்கும் போது இந்த வார்த்தையை அவர் தவிர்த்து இருக்கலாம்.
தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பாஜக தலைவர் உடன் நெருக்கமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அப்படி பாஜகவுடன் நெருக்கமாக இருக்கும் அவர் எப்படி தவெக கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்று தெரியவில்லை. பாஜகவில் இருந்து ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர முயற்சித்தார்கள். அவர் வரவில்லை. அவருக்கு பதிலாக விஜய்யை ஏற்பாடு செய்து இருக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
விஜய்யின் அப்பா,புஸ்ஸி ஆனந்த் பற்றி கூறும் போது, என் மகன் விஜய்யுடன் இருப்பவர்கள் கிரிமினல்கள் தான் என்று சொன்னார்.நான் சொல்லவில்லை.விஜய்யின் அப்பாதான் சொன்னார். அப்போது எதற்காக அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. ஒரு சமயம் கிரிமினல் இப்போது நல்ல ஆளாக மாறியிருக்கலாம். அதுவும் எனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}