இது சூப்பராச்சே.. பயணிகள் சிரமம் இல்லாமல்.. லக்கேஜ் வைக்க.. சென்னை பேருந்துகளில் செம ஏற்பாடு!

Feb 09, 2024,05:57 PM IST

சென்னை: பஸ்களில் ஏறும் பயணிகள்  லக்கேஜ்களை வைப்பதற்கு வசதியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் மாநகர பேருந்துகளில் முன்னும் பின்னும் இரண்டு சீட்டுகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.


சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கிளாம்பாக்கத்தில் மிகப்பெரிய முனையம் கட்டப்பட்டது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயிரிடப்பட்டது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும், பிற பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 




அதேபோல சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தொடர்ச்சியாக பல்வேறு வசதிகளை சிஎம்டிஏ நிறுவனமும், எம்டிசி எனப்படும் மாநகரப் போக்குவரத்துக் கழகமும் ஏற்படுத்தி வருகின்றன. இங்கு குடிநீர், கழிவறை, திருநங்கைகளுக்கான கழிவறை, மாற்றுத்திறனாளிகளுக்கான  குறைவான உயரம் கொண்ட டிக்கெட் வாங்கும் இடம், கடைகள், ஏடிஎம்கள், தனி மருத்துவமனை, நகரும் படிக்கட்டுகள், ஓய்வறைகள், உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


இது மட்டுமல்லாமல்  கலைஞர் நூற்றாண்டு போக்குவரத்து முனையத்திற்காக புதிய ரயில் நிலையம் அமைக்கவும், அங்குள்ள  பேருந்து நிலையத்தை ஆகாய நடைபாதை மூலமாக இணைக்கும் பணிகளும் தற்போது தொடங்கியுள்ளது.  பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நடைபாதைகள் போன்றவையும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.




இந்நிலையில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும்  மாநகரப் பேருந்துகளில் முன்னும் பின்னும் இரண்டு சீட்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த காலி இடத்தில் பயணிகள் லக்கேஜ் வைப்பதற்கு வசதியாக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.


பஸ்களில் ஏறுவோர் படிக்கட்டுக்கு அருகிலேயே லக்கேஜ்களை வைத்துக் கொண்டால் இறங்கும்போது சிரமமாக இருக்காது என்பதால் இந்த ஏற்பாடு. இந்திய புதிய ஏற்பாட்டுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்