வார இறுதி நாட்கள், கிருஷ்ண ஜெயந்தி.. கூடுதலாக 985 சிறப்பு பேருந்துகள்.. போக்குவரத்து கழகம் திட்டம்!

Aug 23, 2024,05:07 PM IST

சென்னை: வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு, திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், தினசரி இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக மொத்தம் 985 சிறப்பு பேருந்துகளை இயக்க மாநில போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் தொடர் விடுமுறை நாட்கள் வந்தாலே மக்கள் வீடுகளில் இல்லாமல் வெளியேறி தங்கள் பொழுதுகளை கழிக்க பல்வேறு இடங்களுக்குச் செல்கிறார்கள். இதற்காக போக்குவரத்து சேவைகளை அதிகம்  பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னையிலிருந்து பிற பகுதிகளுக்கு செல்ல அதிக அளவு மக்கள் பஸ் சேவையை பயன்படுத்துவது வழக்கம். அந்த வரிசையில் இந்த வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் கிருஷ்ண ஜெயந்தி என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், மக்கள் எளிதாக பயணம் செய்யவும் தினசரி இயக்கப்படும்  பேருந்துகளை விட கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.




அதன்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அதாவது சனி மற்றும் ஞாயிறு அன்று திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 485 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 25, 26-ம் தேதிகளில் 60 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 23 மற்றும் 24-ம் தேதிகளில் ஓசூர், பெங்களூரு, திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணிக்கு 70 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.


பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை மற்றும் பிற பகுதிகளுக்கு 350 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 985 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளை முன்பதிவு செய்ய www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc என்ற ஆப் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்