சென்னை: ஆயுதபூஜை விடுமுறை கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை-தூத்துக்குடி-நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தமிழகத்தில் வேலை நிமிர்த்தமாக மற்ற பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து வசிக்கும் மக்கள் அதிகம். இவர்கள் இந்த பண்டிகை காலங்களில் தான் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்வார்கள்.
இதனால், பண்டிகை நாட்களில் பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இதனை தவிர்க்கும் பொருட்டு சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஆயுதபூஜை அக்டோபர் 11ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அக்டோபர் 12 விஜயதசமி, ஞாயிற்றுக்கிழமை பொதுவிடுமுறை என தொடர்ந்து மூன்று தினங்கள் வருகின்றன.
இந்த விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல அநேக நபர்கள் திட்டமிட்டுள்ளனர். ரயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் காலியாகி உள்ளன.இதனால் தெற்கு ரயில்வே சென்னை-தூத்துக்குடி-நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜோலார்பேட்டை, சேலம்,கரூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை வழியாக 17 பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட உள்ளது.
அந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து 9ம் தேதி மாலை 7 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக 10ம் தேதி இரவு 7.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படுகிறது. இதே போல அருப்புக்கோட்டை வழியாக சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மொத்தம் 23 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ள இந்த ரயிலானது சென்னை எழும்பூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி வழியாக இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில் சென்னையில் இருந்து 8ம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக 9ந்தேதி மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படுகிறது.அதன்படி சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
{{comments.comment}}