சென்னை: விஜய் ரசிகர்கள் இன்று வேற லெவல் கொண்டாட்டத்தில் குதித்துள்ளனர். விஜய் நடித்த முதல் படமான வெற்றியின் 40வது ஆண்டைக் கொண்டாடி வந்த அவர்களுக்கு இப்போது இன்னொரு ஹேப்பி நியூஸ் கிடைத்துள்ளது. அது கட்சியின் பெயரில் உள்ள எழுத்துப் பிழை விரைவில் சரி செய்யப்படவுள்ளது என்ற சேதிதான்.
நடிகர் விஜய் இப்போது தலைவர் விஜய்யாகி விட்டார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அவர் தொடங்கியுள்ள கட்சி, இன்னும் தேர்தலை கூட சந்திக்காத நிலையில் பலருக்கும் கிலி ஏற்படுத்தியுள்ளது. வயிற்றில் புளியைக் கரைத்தாற் போல பலரும் புலம்பிக் கொண்டுள்ளனராம்.
மறுபக்கம், விஜய் வருகையால் யாருக்கெல்லாம் ஆப்பு வரும்.. யாருடைய வாக்கு கோட்டையில் ஓட்டை விழும் என்ற விவாதங்களும் சூடு பிடித்துள்ளன. இப்படி ஆளாளுக்கு விவாதங்களில் குதித்துள்ள நிலையில் நாம விளையாடப் போற களம் 2026தான்.. இப்போதைக்கு மத்த வேலையைப் பார்ப்போம் என்று விஜய் கூலாக தனது ஷூட்டிங்கில் புகுந்து விளையாடிக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில்தான் அவரது கட்சிப் பெயரில் உள்ள எழுத்துப் பிழை குறித்து அவரது கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. தமிழக வெற்றி கழகம் தப்பு.. தமிழக வெற்றிக் கழகம்தான் சரி என்று அனைவருமே எடுத்துக் கூறியதை விஜய் ஆமோதித்துள்ளாராம். சரி பண்ணிடலாம் என்றும் சொல்லி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து விஜய் ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர். இதையும் இன்று முழுவதும் அவர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். எங்கண்ணா.. தப்புன்னு எடுத்துச் சொன்னா தன்னை திருத்திக்க தயங்க மாட்டார் என்றும் பெருமையுடன் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
திருத்துறதையும் திருத்தறீங்க.. அப்படியே அந்த தமிழக அப்படிங்கிற பெயரையும் தமிழ்நாடுன்னு மாத்தி விட்ருங்களே.. இன்னும் "தெறி"யா இருக்கும்.. அதையும் விமர்சித்துக் கொண்டிருக்கும் சிலர் "மெர்சல்" ஆய்ருவாங்கள்ள.. அப்படின்னும் பலர் ஆலோசனை சொல்லியுள்ளனர்.!
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}