ஹைதராபாத்: ஹைதராபாத்- அயோத்தி இடையிலான நேரடி விமான சேவையை ரத்து செய்ய உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. தொடங்கிய இரண்டு மாதங்களிலேயே இந்த சேவை நிறுத்தப்படுகிறது.
அயோத்தியில் பிரமாண்ட அளவில் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பல்வேறு முக்கிய பிரபலங்களும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்து கலந்து கொண்டனர். அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதை அடுத்து இங்கு ஏாளமானோர் வந்து ராமரை வழிபட்டு சென்றனர். இதனால் அயோத்தியில் கூட்டம் அதிகரித்தது.

திருப்பதி கோவிலை மிஞ்சி விடும்.. இனிமேல் அயோத்தி ராமர் கோவில்தான் இந்தியாவிலேயே பணக்கார கோவிலாக இருக்கும் என்றெல்லாம் இது வர்ணிக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்தை பெறத் தவறியதாலும், அயோத்தியை உள்ளடக்கிய எம்.பி. தொகுதியியேலே பாஜக தோல்வியைச் சந்தித்ததாலும் நிலைமை தலைகீழாக மாறி விட்டது. பாஜகவினர் பலரும் அயோத்திக்கு எதிராக திரும்பியுள்ளனர். பலர் ராமரை வணங்குவதையே விட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள். இதனால் அயோத்திக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அடியோடு குறைந்து விட்டது.
அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், ராமர் கும்பாபிஷேகத்திற்கு முன்பாகவே கடந்த டிசம்பர் 30ம் தேதி அயோத்தியில் மகரிஷி வால்மீகி விமான நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில், ஜனவரி 21ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் தலைநகர் டெல்லியில் இருந்து அயோத்திக்கு ஸ்பைஸ்ஜெட் விமான சேவை தொடங்கப்பட்டது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மும்பை, சென்னை, அகமதாபாத், ஜெய்பூர், பெங்களூரு, பாட்னா உள்ளிட்ட நகரங்களில் இருந்து அயோத்திக்கு விமான சேவையை தொடங்கியது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக தொடங்கி நடந்தி வந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், தற்பொழுது, ஹைதராபாத் - அயோத்தி இடையேயான சேவையை மட்டும் நிறுத்திள்ளது. பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.
அயோத்தியில் மிகப் பிரமாண்டமாக கோவில் கட்டி திறந்து கடைசியில் இப்படி கூட்டமே வராத நிலை ஏற்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}