கொழும்பு: உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அமி தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு அரசு கலைத்து விட்டது. முன்னாள் கேப்டன் அர்ஜூன ரணதுங்கா தலைமையில் புதிய இடைக்கால நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நடப்பு உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி மோசமாக விளையாடி வருகிறது. தொடர்ந்து தோல்விகளைக் குவித்து வருகிறது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே இலங்கை அணி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. அரை இறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பும் போய் விட்டது.
குறிப்பாக இந்தியாவுடன் விளையாடியபோது இலங்கை அணி மிக மிக மோசமாக விளையாடியது. ரன் எடுக்கவே தடுமாறியது. இது ரசிகர்களை பெரும் அப்செட்டாக்கி விட்டது. இந்த நிலையில், இலங்கை அரசு, கிரிக்கெட் நிர்வாகத்தில் தலையிட்டுள்ளது. கிரிக்கெட் வாரியத்தை கலைத்து விட்டது. முன்னாள் கேப்டனும், அரசியல்வாதியமான அர்ஜூன ரணதுங்கா தலைமையில் புதிய இடைக்கால நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை இலங்கை விளையாட்டு அமைச்சர் ரோஷன் ரணசிங்கே வெளியிட்டுள்ளார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடைக்கால நிர்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் விவரம் வருமாறு:
அர்ஜூன ரணதுங்கா (சேர்மன்)
எஸ்.ஐ. இமாம் (ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி)
ரோஹினி மாரசிங்கே (ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி)
இரங்கினி பெரேரா (ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி)
உபாலி தர்மதேசா
ரகிதா ராஜபக்சே
ஹிஷாம் ஜமால்தீன்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
{{comments.comment}}