டெல்லி: இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக டெல்லிக்கு வந்துள்ள அதிபர் அநுரா குமார திசாநாயகேவுக்கு, ஜனாதிபதி மாளிகையில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசினார்.
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற 9வது அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் அநுரா குமார திசநாயகே மாபெரும் வெற்றி பெற்று இலங்கையின் அதிபரானார்.

இலங்கை அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் திசநாயகே. மூன்று நாள் பயணமாக நேற்று டெல்லி வந்த இலங்கை அதிபருக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அநுரா குமாராவை சந்தித்தது பேசினார் .
இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இலங்கை அதிபர் அநுரா திசநாயக்கே வுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ஆகியோர் பங்கேற்றனர்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை அதிபர் சந்தித்துப் பேசினார். இரு நாட்டு உறவுகள், வர்த்தகம், தமிழக மீனவர்கள் விவகாரம், இலங்கை தமிழர்கள் பிரச்சினை, கச்சத்தீவு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்...எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
சவுதி அரேபியாவில் கோர விபத்து...42 இந்தியர்கள் பலியான துயரம்
பீகாரில் புதிய ஆட்சியமைக்கும் பணிகள் விறுவிறுப்பு.. வெற்றி விழாவுக்கு பிரதமர் மோடி வருகிறார்
என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.. தேஜஸ்வி யாதவ் மீது லாலு பிரசாத் மகள் புகார்
மோமோ விற்பனையில் தினசரி 1 லட்சம் சம்பாதிக்கிறார்களா பெங்களூரு இளைஞர்கள்??
மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்!
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கியது!
மின்னல்வெட்டு தாங்க முடியாமல்.. இடி முழக்க சத்தம் இட்டு பிரசவித்த குழந்தை.. மழையே..!
{{comments.comment}}