கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கையில் 17 வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. 225 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 113 தேவைப்படுகிறது. 196 உறுப்பினர்களை தேர்வு செய்யவே நேற்று இலங்கை மக்கள் வாக்களித்தனர். மீதமுள்ள 29 இடங்கள் வாக்கு சதவிகித அடிப்படையில் மற்ற கட்சிகளுக்கு வழங்கப்படும்.
தேர்தலில் அரசியல் கட்சி சார்ந்த 5,464 வேட்பாளர்களும், 3357 சுயோச்சை வேட்பாளர்களும் என மொத்தம் 8821 பேர் போட்டியிட்டனர். வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் ஆளும் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி கூட்டணி முன்னிலை வகிக்கிறது. ஜனாதிபதி அனுராவின் கட்சி தலைமையிலான கூட்டணி இது.
தேசிய மக்கள் சக்தி கட்சி இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 62.59 சதவீதம் வாக்குகளை பெற்று 123 இடங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ளது. அதேபோல் சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 17.8% வாக்குகளை பெற்று, 31 இடங்களை கைப்பற்றியுள்ளது. தமிழர் கட்சியான இலங்கை தமிழரசு கட்சி, புதிய ஜனநாயக முன்னணி கட்சி அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அநுரா குமார திசநாயக்க இலங்கையின் அதிபராக வெற்றி பெற்றார் என்பது நினைவிருக்கலாம். அதேபோல் நாடாளுமன்ற தேர்தலிலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையிலான ஆட்சி அமையவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}