- ஸ்வர்ணலட்சுமி
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய இரத பந்தம் குறித்து இன்று பார்க்கப் போகிறோம்.
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், சித்திரக்கவியில் மிகவும் வல்லவர். இவர் நம் தெய்வ மொழியான தமிழ் மொழியில் பல பாடல்கள் எழுதி உள்ளார். அழகர் முருகனைப் பற்றி பாடுவதில் பாம்பன் சுவாமிகள் மிகவும் வல்லவர்.
அவர் தனது பாடல்களில் சுப்பிரமணிய தத்துவத்தையும் அதன் மேன்மையும் தெளிவுற விளக்கியுள்ளார். அனுதினமும் அழகுத் தமிழால் அழகன் முருகனை பாடி பாடி ஆனந்தம் அடைந்தவர் பாம்பன் சுவாமிகள். இவர் அருளிய மொத்த பாடல்களின் எண்ணிக்கை 6666 என்கின்றனர். இந்த பாடல்கள் அனைத்தும் பக்தர்களுக்கு எல்லா நலன்களையும் அருளும் மகா மந்திரம்.

பாம்பன் சுவாமிகள் எழுதிய குறிப்பிட்ட பாடல்கள் மூலம் குறிப்பிட்ட காரியங்கள் சித்தியாகும் என்பதே பக்தர்களின் அனுபவமாக அமைந்துள்ளது. இவற்றுள் முக்கியமான ஒன்று இரத பந்தம்.
இதனை நாம் நெடுதூர பயணம் மேற்கொள்ளும் போது 27 முறை பாராயணம் செய்வதால் நமது பயணம் வெற்றி அடையும். நம் பயணம் பாதுகாப்பாக அமையும். நம்மால் இதனை படிக்க நேரமில்லை எனில் மொபைல் போனில் கூட கேட்கலாம்
இனி இரத பந்தம் பாடலைப் பார்ப்போம்
பதம் பிரித்தது
இருள் பொருதா வம்பலச்
சித்தென்னுமுரு கா நீடிரு
விண்ணோர் தேடு மருந்தே
மாண் பொருவாச்சீர்
தேசுதருஞ் செந்தி நறந் தீர்த்த
விற லோங்கு சிதாவா
சிறந்தத மாவின் பருள்
பாம்பன் சுவாமிகளின் சக்தி வாய்ந்த இரத பந்தம் நாம் தூரப் பயணம் மேற்கொள்ளும்போது நமது பயணம் பாதுகாப்பாக அமைய 27 முறை பாராயணம் செய்யுங்கள்.
வாழ்க வளமுடன்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்
அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்
ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?
விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை
பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்
சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!
லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்
{{comments.comment}}