சென்னை: புற்று நோய்.. இன்று மக்களை மிரட்டி வரும் அபாயகரமான நோய்களில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் புற்று நோயை, குறிப்பாக ரத்தப் புற்றுநோயிலிருந்து நிச்சயம் மீள முடியும்.. அதற்குத் தேவை உரிய விழிப்புணர்வு மட்டுமே.
கேன்சர் என்ற பேரைக் கேட்டதுமே அதிர்ச்சி அடையத் தேவையில்லை. பயம் கொஞ்சம் கூட வேண்டாம் மக்களே.. உரிய விழிப்புணர்வு தான் வேண்டும். பொதுவாக அனைத்து வகை கேன்சர்களிலும் இருந்தும் மீண்டு வரலாம் - எப்போது என்றால், அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால். அதை விட முக்கியமாக, நம் உடம்பின் மீது நமக்கு அக்கறை இருக்கும் போது நிச்சயம் புற்று நோய் என்ன, எதிலிருந்தும் மீள முடியும்.

கேன்சரால் இழப்புகள் நேரிட காரணம், நம் கவனமின்மை தான். நம் உடம்பில் ஏதோ சரியில்லை ஏதோ தவறாக நடக்கிறது என்று எண்ணம் உண்டாகும் போதே மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும். பலர் அஜாக்கிரதையாக இருப்பதால்தான் நோய் முற்றி, உயிரிழப்பு வரைக்கும் அது போய் விடுகிறது. எந்த நோயாக இருந்தாலும், நோய் முற்றிய நிலையில் சென்றால், சிகிச்சைக்கு போதிய அவகாசம் இன்றி இறப்பை நோக்கித் தள்ளப்படுகிறோம்.
இப்போது ரத்தப் புற்றுநோயை விரடி அடிக்க ஆயத்தமாகுங்கள் !!!
ரத்தப் புற்றுநோய்க்கு தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை, வேதிச் சிகிச்சை, கதிர் மருத்துவம் போன்ற பல சிகிச்சைகள் இருக்கிறது. இதில் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சையும் ஒரு முறை ஆகும். அதாவது கேன்சர் பாதிப்புக்குள்ளான நபரின் பாதிப்படைந்த ஸ்டெம் செல்லை புதுப்பிப்பது ஆகும். அதற்கு அதே வகை ஸ்டெம் செல்களை கொண்ட நபர் தன் ஆரோக்கியமான ஸ்டெம் செல்களை கொடுத்து பாதிப்படைந்தோரின் ஸ்டெம் செல்களை புதுப்பிக்க முடியும். இந்த முறை கொண்டு பிளட் கேன்சரை சரி செய்யலாம்.
இதில் சவாலான விஷயம் என்னவென்றால் பல கோடி மக்களில் நம் ஸ்டெம் செல் வகையில் உள்ள அந்த நபரை தேடிக் கண்டுபிடிப்பதே.

அயல் நாடுகளில் எல்லாம் நம் ரத்த வகையை அறிந்து வைத்திருப்பது போல, அவரவர் ஸ்டெம் செல் வகையை அறிந்து வைத்திருக்கிறார்கள். இதனால் எளிதில் தேவைப்படும் ஸ்டெம் செல் கொண்ட நபரை தொடர்பு கொண்டு ஸ்டெம் செல் தானம் பெற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் நம் நாட்டில் இந்த விழிப்புணர்வு இன்னும் வரவில்லை. அதற்கு மாறாக பயம் மட்டுமே அதிகம் இருக்கிறது. ஸ்டெம் செல் குறித்த விழிப்புணர்வு நமக்கு அதிகம் தேவை.
நம் ஸ்டெம் செல் வகையை அறியவும், நான் இந்த வகை ஸ்டெம் செல் கொண்டவன் என்பதை பதிவு செய்ய DKMS-BMST, DATRI போன்ற தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஸ்டெம் செல் வகையை அறிவது, ஸ்டெம் செல் தானம் செய்வது பெரிய மலை ஏறும் கஷ்டம் அல்ல, மிக மிக எளிதான ஒன்றுதான். DKMS-BMST, DATRI இந்த தொண்டு நிறுவனங்களை அணுகி விண்ணப்பித்தால், ஸ்டெம் செல் வகையை எளிதாக அறிந்து கொள்ள முடியும், தானமும் கூட இவர்கள் மூலமாகவே செய்யலாம்.
வீடு தேடி வரும் ஸ்டெம் செல் வகையை அறியும் கிட், அதனுள் மூன்று குச்சிகள் இருக்கும். அதை கொண்டு வாயில் வலது பக்கம், இடது பக்கம், மேல் கீழ் என்று நம் உமிழ்நீர் (எச்சில்) சாம்பிள்களை மட்டும் கொடுத்தால் போதும் - கொரோனா டெஸ்ட் எடுப்பது போலத்தான் இதுவும்.

அவர்கள் நம் உமிழ்நீரில் இருந்து ஸ்டெம் செல் வகையை அறிந்து கொள்வார்கள். ரத்தப் புற்றுநோய் பாதிக்கப்பட்டோரின் ஸ்டெம் செல்களோடு நம் ஸ்டெம் செல்கள் பொருந்தினால் நம்மை தொடர்பு கொள்வார்கள். நாம் ஸ்டெம் செல் தானம் செய்து ஒரு உயிரை காப்பாற்றலாம்.
ஸ்டெம் செல் தானம் செய்வதும், ரத்த தானம் செய்வது போலத்தான். மிக மிக எளிதானது, ஆபத்து இல்லாதது, உயிர் காக்கக் கூடிய. அதை கண்டு அஞ்சாமல் ஒரு உயிரை காக்க துணிவோம்.. இந்த கேன்சரை கண்டு பயப்படாமல், விழிப்புணர்வுடன் இருந்து அதை விரட்டுவோம்!
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}