விலங்குகள் உலகமே வித்தியாசமானது.. நாம் நினைப்பது போல அங்கு வாழ்க்கை எளிதானது இல்லை.. மிக மிக போராட்டமானது. ஒவ்வொரு நொடியும் அவற்றுக்கு நிச்சயமில்லாதது. அப்படி ஒரு போராட்டக் களம்தான் விலங்குகளின் உலகம்.
பிற விலங்குகளிடமிருந்து தப்பிக்க போராடுவது ஒரு பக்கம் இருந்தாலும் கூட தங்களது இனத்துக்குள்ளேயே கூட பல விஷயங்களுக்காக போராடுவதும் விலங்குகளின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சமாக உள்ளது. குறிப்பாக இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு விலங்குமே கடுமையான போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.
அதிலும் பெண் ஜோடியை தாஜா செய்வதற்கும், அவர்களை அடைவதற்கும் ஆண் விலங்குகள் நிறையவே போராட வேண்டியிருக்கிறதாம். இது கிட்டத்தட்ட எல்லா விலங்குகளிடமும் காணப்படும் பொதுவான அம்சமாக உள்ளது. செக்ஸ் உறவுக்கு ஆசைப்படும் ஆண் விலங்கானது, தனது ஜோடி விலங்கை சரிக்கட்ட நிறைய மெனக்கெடுகிறதாம். எல்லாம் சுபமமாக முடியும் சமயத்தில் சக ஆண் விலங்குகளிடமிருந்து கடும் போட்டி வருமாம். அதையும் தாண்டிய பிறகுதான் தான் நினைத்ததை அந்த ஆண் விலங்கால் அடைய முடிகிறதாம்.

விலங்குகளைப் பொறுத்தவரை பெண் விலங்கானது பொதுவாக பல்வேறு ஆண் ஜோடியுடன் இணைந்து புணருவது வழக்கமாக உள்ளது. எனவே கடுமையான சண்டைகளுக்கும் அங்கு பஞ்சம் இருப்பதில்லை. வித்தியாசமான முறையில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் விலங்குகள் நிறையவே உள்ளன.
இந்த எலி இருக்குல்லியா.. அதிலும் இந்த வெள்ளெலி இருக்கே பாக்கத்தான் குட்டியூண்டா இருக்கும்.. ஆனால் ஒரு நாளைக்கு 75 தடவை செக்ஸ் வைத்துக் கொள்ளுமாம். அந்த அளவுக்கு ஆக்டிவான எலி இது. இந்த எலிகளுக்கு வால் குட்டியாக இருக்கும், கால்களும் குட்டிதான். உடம்பும் கூட குறுகலாகத்தான் இருக்கும். ஆனாலும் செக்ஸூவலாக இது மிக மிக ஆக்டிவான விலங்கு வகையாகும்.
பெண் சிங்கங்கள் அதிகபட்சம் 15 வயது வரை குட்டிகளை ஈனும் தன்மை கொண்டவை. அதன் பிறகு அவற்றின் கர்ப்பம் தரிக்கும் திறன் குறைந்து அப்படியே நின்று விடும். பெண் சிங்கங்கள் கர்ப்பம் தரிக்கும் திறனுடன் இருக்கும் சமயத்தில் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட முறை கூட உறவு வைத்துக் கொள்ளுமாம். அதேபோல ஒரே நாளில் பல ஆண் சிங்கங்களுடன் அவை உறவில் ஈடுபடுமாம்.

பெண் முயல்கள் சற்று வித்தியாசமானவை. ஒவ்வொரு 17 நாட்களுக்கு ஒருமுறை செக்ஸ் வைத்துக் கொள்ளுமாம். அப்படி வைத்துக் கொள்ளும்போது அந்த செக்ஸ் உறவானது 14 நாட்களுக்குத் தொடருமாம்.
ஆஸ்திரேலியாவில் ஒரு வகை எலி உள்ளது. ஆன்டிகைனஸ் என்று அதற்குப் பெயர். இந்த வகை எலிகள் விபரீதமானவை. அதாவது செக்ஸ் வைத்துக் கொள்வதில் மிகவும் மூர்க்கமானவை. எப்படி என்றால். ஆண் எலிகள், தொடர்ந்து 14 மணி நேரம் வரை கூட செக்ஸ் வைத்துக் கொள்ளுமாம். இன்னும் சில சமயங்களில் இவை நாள் கணக்கில் கூட செக்ஸ் வைத்துக் கொள்ளுமாம். இப்படி மராத்தான் செக்ஸ் வைத்துக் கொள்வதால் அந்த ஆண் எலிகள் இறந்து விடும் சூழலும் அதிகமாம். இதனால்தான் ஆஸ்திரேலியாவில் இந்த வகை எலிகளின் எண்ணிக்கை, குறிப்பாக ஆண் எலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறதாம். கிட்டத்தட்ட அழியும் நிலையில் உள்ளதாக சொல்கிறார்கள்.

வாத்துகளின் செக்ஸ் முறை இன்னும் வித்தியாசமானது. ஆண் வாத்துகளின் ஆண்குறியானது டிரில்லிங் மெஷின் போலவே செயல்படுமாம். அதாவது பெண் வாத்துகளின் வெஜைனா பகுதியானது வழக்கமான துளையுடன் இருக்காதாம். இதனால் ஆண் வாத்துக்கள் அந்த இடத்தில் துளையை ஏற்படுத்தி பிறகுதான் உள்ளே செல்ல முடியுமாம். இதனால் இயற்கையிலேயே ஆண் வாத்துகளின் இனப்பெருக்க உறுப்பானது டிரில்லிங் மெஷின் செயல்பாட்டை ஒத்திருக்குமாம்.
இப்படி ஒவ்வொரு விலங்கினத்திலும் விதம் விதமான வித்தியாசமான இனப்பெருக்க முறைகள் உள்ளது. ஒட்டகச் சிவிங்கிதான் உலகிலேயே மிகவும் உயரமான விலங்கினம். ஆனால் பெண் ஒட்டகச் சிவிங்கியை சமாதானப்படுத்தி உறவுக்கு உட்படுத்துவதற்கு என்னென்னவோ செய்யுமாம் ஆண் ஒட்டகச் சிவிங்கி. விலங்குகள் உலகம் வினோதமானதுதான்!
மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தருக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!
திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்
மரபுக்கவிதை புதுக்கவிதையிலும் சிறந்து விளங்கியவர்..தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்
திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு: நயினார் நாகேந்திரன்!
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி
ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!
{{comments.comment}}