- சசிகலா விஸ்வநாதன்
அழிக்க இயலா 'நான்'!
'நான்'அழிப்பேன்;
என்பது ஆணவம்!
நான் அழித்தேன்
என்பது முரண்!
'நான்' தானே அழியும்!
அழியும் வரை காத்திரு!
என் பாதை
வலிது அல்ல!
எளிது!
கடிது அல்ல;
இலகுவானது!
சிக்கலானது அல்ல;
சீர்மையானது!
ஆனால்...
மற்றோர் தேரும் பாதை இல்லை அது!

நான் காண முயலும் உண்மையும்,
நீ தேடும் உண்மையும்
ஒன்றே!
அதன் வெவ்வேறு பக்கங்கள்!
முக்கோண பிரிசத்தின்
உண்மை ஒளியின் சிதறல்களே!
சிதறல்கள் சேர
உண்மை பிரகாசிக்கும்!
என் பாதை வேறு!
தேடலின் முற்றில்
தெளிவாய் தெரியும் அது!
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும், தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
நான்'அழிந்த 'அது'
எல்லா நேரமும் பொழிவாயா?
உயிர் பிழைத்த பெரியப்பா… மீண்டும் தலைவிரித்தாடிய வறுமை.. வேரில் இருந்து விழுது வரை (5)
வங்கக்கடலில் உருவாகும் ‘அக்வான்’ புயல்: வடதமிழகத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை!
சிந்தனைச் சிதறல்.. கொடுப்பதில் நிறைவு காணுங்கள்!
பாலகிருஷ்ணன் மரணம்: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
அண்ணா – என் வாழ்வின் முதல் நண்பன் .. ரம்யாவின் கவிதைத் தோட்டம்
ஐசிசி தலைவராக ஜெய் ஷா மீண்டும் போட்டியின்றி தேர்வு: இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்கிறார்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல - மகரவிளக்கு பூஜைகளுக்காக இன்று மாலை நடை திறப்பு!
{{comments.comment}}