அடித்து நொறுக்கும் போர்க்களமாக சிந்துவும் வைகையும்.. சு. வெங்கடேசன் பெருமிதம்!

Mar 06, 2023,02:38 PM IST
மதுரை: கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட எலும்புத்துண்டுகளை பகுப்பாய்வு செய்து அடித்து நொறுக்கும் போர்க்களமாக சிந்துவும் வைகையும் இருக்கிறது. எனவேதான் “கீழடி எங்கள் தாய்மடி” என்று உரக்கச்சொன்னோம் என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.



மதுரை கீழடியில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.  ரூ. 25 கோடியில் அமைக்கப்பட்ட இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வத்தார்.



இதுகுறித்து சு.வெங்கடேசன் இன்று போட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

அரசியல் சாசனத்தின் முதல் அத்தியாயத்தின் முதல் படம் திமிலுள்ள காளை.  அது சிந்துவெளிநாகரிகத்தின் அடையாளம். அதே திமிலுள்ள காளை தான் கீழடி அருங்காட்சியத்திலும் துள்ளிகுதிக்கிறது.

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட எலும்புத்துண்டுகளை பகுப்பாய்வு செய்து அடித்து நொறுக்கும் போர்க்களமாக சிந்துவும் வைகையும் இருக்கிறது.

எனவேதான் “கீழடி எங்கள் தாய்மடி” என்று உரக்கச்சொன்னோம். விடாது குரலெழுப்பினோம். அனைத்து தளத்திலும் அனைவருடனும் இணைந்து செயல்பட்டோம். இந்த அரசியல் செயல்பாட்டிற்காக நேற்று நடந்த கீழடி அருங்காட்சியக திறப்புவிழாவில் தமிழக முதலமைச்சரால் சிறப்பு செய்யப்பட்டது மகிழ்ச்சி என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்