டெல்லி: அதானியால் எந்த லாபமும் இனி இல்லை என்பதால், அவரை மெதுவாக கை கழுவப் போகிறது பிரதமர் மோடி அரசு என்று கூறியுள்ளார் பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியம் சாமி.

அதானி நிறுவனம் தொடர்பாக அமெரிக்காவின் ஹின்டர்பர்க் நிறுவனம் சரமாரி புகார்களையும், குற்றச்சாட்டுக்களையும் வைத்ததைத் தொடர்ந்து அதானி குழுமம் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளது. பங்குச் சந்தையின் அதன் பங்குகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன. உலகப் பணக்காரர்கள் வரிசையில் 15வது இடத்துக்குப் போய்விட்டார் அதானி.
வேகமாக மேலேறி வந்த அதானி இப்போது அதை விட பல மடங்கு வேகத்தில் பின்னோக்கி போக ஆரம்பித்து விட்டார். அதானி நிறுவனம் என்னாகுமோ என்ற பரபரப்பில் தொழில்துறை உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி அரசு, அதானியைக் கை கழுவ ஆரம்பித்துள்ளதாக சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சாமி போட்டுள்ள டிவீட்டில், அதானி தொடர்பான பாஜகவின் நம்பிக்கை போய் விட்டது. எனவே அவரை மோடி அரசு மெதுவாக கை கழுவ ஆரம்பித்து விட்டதாக நான் கருதுகிறேன். லகுவாக வந்தது லகுவாக போய்விடும் என்று கூறியுள்ளார் சாமி.
இன்னொரு டிவீட்டில், உடனடியாக அதானி சொத்துக்களை தேசியமயமாக்கி விட வேண்டும். அதன் பிறகு அவற்றை ஏலத்தில்விட வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு அவர் ஆலோசனை கூறியுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}