சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை பல பகுதிகளில் பரவலாக கோடை மழை பரவலாக பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதீத வெப்பம் சற்று தணிந்து குளுமை நிலவுவதால் மக்கள் குஷியாகியுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக வெயில் மட்டும் அல்லாமல் வெயிலோடு சேர்ந்து அனல் காற்றும் வீசி மக்களை வாட்டி எடுத்தது. இதனால் மக்கள் செய்வதறியாமல் தகித்து கொண்டிருந்தனர். ஐயோ கடவுளே இந்த வெயில் கொடுமையை தாங்க முடியவில்லையே. சூரிய பகவானே கொஞ்சம் கருணை காட்டுங்களேன் என மக்கள் புலம்பி தவித்து வந்தனர். இது ஒரு வேளை அவருக்கு கேட்ருச்சோ என்னவோ, மழையைப் பொழிவித்து மக்களுக்கு நிம்மதி அளித்துள்ளார் மிஸ்டர் வருண்!
கடந்த இரண்டு நாட்களாக வெயில் சற்று தணிந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலையிலிருந்து விட்டு விட்டு ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. தாம்பரம், கொளத்தூர், நுங்கம்பாக்கம், குரோம்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. சில இடங்களில் லேசான கன மழையாகவும் இது இருந்தது.
மழை நீடிக்கும்- வானிலை மையம்
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என்றும் சந்தோஷச் செய்தியைச் சொல்லியுள்ளது வானிலை மையம்.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டம் குடிதாங்கி மற்றும் மதுரை மாவட்டம் சாத்தியாரில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வால்பாறையில் 3 செமீ மழையும், திருவள்ளூரில் 1.3 செமீ மழையும் சிதம்பரத்தில் 1.1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}