- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed
எம்மதமும் சம்மதம் என்று சிறப்பாக இன்று கொண்டாடுவோம்.
நமக்கு தெரிந்த நண்பர்கள் அல்லது நம்மிடம் பழகிய முஸ்லீம் நண்பர்களுக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
இஸ்லாமிய வரலாற்றில் ரமலானுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த மாதம் முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்புடன் தொடர்புடையது
ரமலான் தினம்.

ரமலான் என்பது முஸ்லீம்களின் புனித மாதமாகவும், இஸ்லாமிய காலண்டரின் ஒன்பதாவது மாதமாகவும் காணப்படுகிறது. இந்த மாதத்தில் நோன்பு நோற்பது முக்கிய கடமையாக பின்பற்றி வருகிறார்கள்.
நோன்பு விடியற்காலையிலிருந்து மாலை வரை கடைப்பிடிக்கப் படுகிறார்கள். உணவு, தண்ணீர், தீய செயல்கள் ஆகியவற்றிலிருந்து விலக வேண்டும் என்பதற்காக ரமலான் மாதம் ஆன்மீக மாதமாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்த மாதத்தில் தர்மம் செய்தல் முக்கியமானது என கருதி ஏழை மக்களுக்கு உதவுவது மிகுந்த புண்ணியம் என நம்பப்படுவதால் தன்னால் முடிந்த உதவிகளை ஏழை மக்களுக்கு செய்து வருகிறார்கள் .
முஸ்லீம்கள் அதிகமாக தொழுகை நடத்துகிறார்கள். இரவில் “தராவீஹ்” தொழுகை சிறப்பாக செய்கிறார்கள். ரமலான் மாதத்தில் Qur'an அருளைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து வணங்கி வருகிறார்கள்.
Laylat al-Qadr இந்த மாதத்தில் வரும் இரவு பொழுதினை புனிதமான இரவாக கருதுகிறார்கள். அந்த இரவு ஆயிரம் மாதங்களைக் காட்டிலும் சிறந்த இரவாக கருதுகிறார்கள்.
நோன்பு நோற்க மனதில் உறுதி கொள்ள வேண்டும். சஹூர் (அதிகாலை உணவு) விடியற்காலைக்கு முன் உணவு எடுத்துக் கொள்கிறார்கள். இந்த உணவு நாள் முழுவதும் அவர்களுக்கு சக்தியை தருகிறது. காலை “பஜ்ர்” தொழுகை நேரத்திலிருந்து நோன்பு இருக்கிறார்கள். நோன்பு நேரத்தில் உணவு, தண்ணீர் உட்கொள்வதை தவிர்த்து விடுகிறார்கள்.
தொழுகை அதிக நேரம் செய்து கொண்டும், Qur'an வாசித்து கொண்டும் இருப்பார்கள். சூரியன் மறைந்ததும் நோன்பு திறப்பார்கள். பொதுவாக பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீர் கொண்டு தொடங்குவார்கள். நோன்பு திறந்த பின் மஃரிப் தொழுகை நடத்துகிறார்கள். இரவு நேரத்தில் சிறப்பு தராவீஹ் தொழுகை செய்கிறார்கள்.

நோன்பு மன ஒழுக்கத்தை வளர்ப்பதோடு, சுய கட்டுப்பாட்டை கற்றுக்கொடுத்து சகிப்புத்தன்மையை அதிகரிக்க ரமலான் பண்டிகை காரணமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்த சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இந்த பண்டிகை அமைவதோடு குடும்ப உறவுகள் இந்த மாதத்தில் ஒற்றுமையாக சேர்ந்து கொண்டாடுகிறார்கள். அனைவரும் ஒன்றாக சேர்ந்து உணவருந்தி ஒற்றுமையாக
ரமலான் முடிவில் “ஈத்-உல்-பித்ர்” கொண்டாடுகிறார்கள். ரமலான் தியாகத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத் தருவதோடு மனிதர்களுக்கு சமத்துவ உணர்வை உருவாக்குகிறது. அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)
என்னவளே!
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Poem: அமுதென இனிக்கும் அன்புடை நாயகனே!
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தாயாக, தந்தையாக அரவணைத்தவரை மறந்த ஒரு மகனின் தேடல்
தந்தை எனும் ரத்தினம்
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
இறைவன் அளித்த இணையற்ற அருட்கொடை
{{comments.comment}}