World Oral Health Day.. பல் போனால் சொல் போச்சா?

Mar 20, 2026,03:30 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed


பல் போனால் சொல் போச்சா? 


அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப நமது முகத்தில் காணப்படும் வாய் மற்றும் பற்களின் நலனில் அக்கறை செலுத்த இன்றைய நாளை சிறப்பாக கொண்டாடுவோம்.


World Oral Health Day – உலக வாய்நலன் தினம் 


உலக வாய்நலன் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் வாய்நலத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக கொண்டாடப்படுகிறது. வாய்நலம் பாதிக்கப்பட்டால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து தினமும் இரு முறை பற்களை துலக்க வேண்டும்.


சரியான முறையில் பற்களை துலக்க வேண்டும். அதிக நேரமும் பற்களை தேய்க்க கூடாது .அதிகமாக பற்பொடி மற்றும் பற்பசைகளை பயன்படுத்தக் கூடாது. இனிப்பு உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் சாப்பிடுவது பற்களுக்கு கேடு தரும் என்பதை உணர்ந்து அவற்றை குறைவாக சாப்பிட வேண்டும்.


பல் போனால் சொல் போகும் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும். பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருப்பது உடல் நலத்திற்கும் அவசியம் என்பதை உணர வேண்டும். பல் மருத்துவரை காலம்தோறும் சந்திப்பது நல்லது. குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே வாய்நல பழக்கங்கள் கற்பிக்கப்பட வேண்டும். பல் அழுகை மற்றும் ஈறு நோய்களைத் தவிர்க்க சுத்தம் அவசியம் என்பதை அறிவுறுத்த வேண்டும்.


வாய்நலம் நல்ல நிலையில் இருந்தால் தன்னம்பிக்கை கூடும்.அதோடு மட்டும் இல்லாமல் புன்னகை அழகாக இருக்க வாய்நலம் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். புகைபிடித்தல் வாய்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும், மதுபானம் கூட வாய்நலத்தை பாதிக்கிறது என்பதை அறிந்து கொண்டு அந்த தீய பழக்கங்களை  கைவிட வேண்டும்.




ஆரோக்கியமான உணவு பழக்கம் பற்களை பாதுகாக்கிறது. பழங்கள் மற்றும் காய்கறிகள் பற்களுக்கு நல்லது என்பதை உணர்ந்து அதிகமாக இயற்கையான காய் பழங்கள் போன்றவற்றை நன்றாக மென்று  சாப்பிட வேண்டும்.

தண்ணீர் அதிகம் குடிப்பது வாயை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. ஒவ்வொரு முறையும்  நாம் சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிப்பது மிகவும் நல்லது என்பதை உணர்ந்து நமது வாழ்வில் பின்பற்ற வேண்டும்.


வாய்நல பராமரிப்பு ஒரு தினசரி பழக்கமாக பின்பற்றுவேன் என இன்றைய நாளில் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம். வாய்நலம் நன்றாக இருந்தால் வாழ்க்கை தரம் உயர்கிறது. பல் பராமரிப்பு செலவுகளை குறைக்க முன் எச்சரிக்கையாக அனைவரும் வாய்நலத்தை பாதுகாக்க உறுதி எடுத்துக் கொள்வோம். 


நல்ல வாய்நலம் நல்ல வாழ்க்கைக்கு அடிப்படை ஆகும் என்பதை  உணர்ந்து செயல்படுவோம். மக்கள் வாய்நலத்தை அலட்சியம் செய்யாமல் கவனிக்க வேண்டும். வாய்நலம் உடல் நலத்துடன் நேரடி தொடர்பு கொண்டது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .


பல் நோய்களை ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சையை எடுத்துக் கொள்வோம். சுகாதார பழக்கங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். 

ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?

news

Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!

news

தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!

news

என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?

news

தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!

news

Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?

news

Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்