ஹேப்பி நியூஸ் ஹேப்பி நியூஸ், மே மாதத்தில் மழை பெய்ய வாய்ப்பு- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்

Apr 26, 2024,12:58 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் வெப்பம் சற்று தணிய வாய்ப்புள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டையும் தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் 105 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் மேல் வெப்பம் வாட்டி எடுத்து வருகிறது. இது மட்டுமல்லாமல் நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹூட்டையும் தாண்டி  வெயில் கொளுத்தி உள்ளது. இதனால் இப்பகுதி முழுவதும் வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். 




கடந்த இரண்டு மாதங்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் நல்ல செய்தி ஒன்றை கூறியுள்ளார். இதுகுறித்து அவர்க கூறுகையில்,  மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் ஈரோடு, சேலம், தர்மபுரி, ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில்  லேசானது முதல் மிதமானது வரை மழை  எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் பெங்களூரிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.


இதற்கிடையே, வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருப்பதால் மக்களும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. நிறைய தண்ணீர் குடியுங்கள்.. அதிகம் வெளியில் அலையாதீர்கள். தேவை ஏற்பட்டால் மட்டுமே  வெளியே செல்லுங்கள். பழங்கள் அதிகம் சாப்பிடலாம். பருத்தி உடைகளையே அதிகம் அணியுங்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகள் போதிய அளவு தண்ணீர், மோர் போன்றவை குடிப்பதை உறுதி செய்யுங்கள். பீதி அடையத் தேவையில்லை. மாறாக,  கவனமாக இருந்து கொள்ளுங்கள். அது போதும்.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்