சென்னை: தமிழ்நாட்டில் இந்த வருடம் கோடை மழை 32 சதவீதம் குறைவாகவ பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் வெயில் காலம் என்றால் மே மாதம் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் தான் வெயில் வெளுக்கும். அதற்கு மாறாக இந்த வருடம் கடந்த மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. அதோடு வெப்ப அலை தாக்கமும் அதிகமாக இருந்தது.
இதனால் மக்கள் மிகவும் கடுமையாக பாதிப்படைந்து வந்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக
கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள், விவசாயிகள், வெயில் தாக்கத்திலிருந்து தப்பித்து குளிர்ச்சியை அனுபவித்து வருகின்றனர்.
இருப்பினும் கோடை மழை இந்த வருடம் குறைவாகவே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் இன்று காலை வரையிலான காலகட்டத்தில் இதுவரை 65 மில்லி மீட்டர் அளவிலான மழையே பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 94.9மி.மீ மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் இயல்பை விட 32 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோடை மழையின் அளவு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வறண்டு போய் கிடக்கும் ஏரிகள், குளங்கள், அணைக்கட்டுகளுக்கு நீர் வரத்து இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
{{comments.comment}}